SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பெண் தேடி அலைபவர்களுக்கு பொறி பெயரை மாற்றி 7 இளைஞர்களை மணந்த கில்லாடி பெண்

2016-06-14@ 01:52:29

தாராபுரம் : பெண் கிடைக்காமல் தேடி அலைந்த 7 இளைஞர்களை புரோக்கர் மூலம் பொறிவைத்து திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் நகைகளுடன் தப்பியபோது முதல் கணவனுடன் பிடிபட்டார். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகைகளுடன் ஓட்டம் பிடிக்கும் கல்யாண மன்னன்களைப் பற்றி அதிகம் செய்தி வரும். ஆனால் ஒரே பெண் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்வது மிகவும் அரிதான செய்திதான். இப்படி ஒரு கில்லாடி பெண், தனது பெயரை மாற்றிக்கொண்டு புரோக்கர்கள் மூலம் 7 இளைஞர்களை திருமணம் செய்து, சில மாதங்கள் மட்டும் வாழ்ந்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். 8வதாக ஒருவரை திருமணம் செய்ய முயலும்போது முதல் கணவனுடன் அவர் சிக்கிக்கொண்டார். இந்த சம்வம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். மாட்டு வியாபாரி. இவரது மகன் செல்வகுமார். இவருக்கு பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் புரோக்கர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள போதுபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ராவை (25) நிச்சயம் செய்து செல்வகுமாருக்க பெற்றோர் 2015 அக்டோபரில் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த மே 27ம் தேதி தாராபுரம் காவல் நிலையத்துக்கு வந்த செல்வகுமார், மனைவி பவித்ராவை 15 சவரன் நகைகளுடன் காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் பவித்ராவை தேடிவந்த நிலையில், அவரது முதல் கணவர் கர்ணன் (35) என்பவருடன் உடுமலை பகுதியில் தலைமறைவாக இருப்பதாகவும், மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட அவர், மாலதி, பவித்ரா,

ஏஞ்சலின் என பல்வேறு பெயர்களில் 7 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், இவருக்கு முதல் கணவர் கர்ணன் மூலமாக 2 குழந்தைகள் உள்ளதும், பல ஆண்டுகளாக மணப்பெண் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உடுமலை பஸ் நிலையத்தில் நின்றிருந்த பவித்ரா என்ற மாரியம்மாள் மற்றும் அவரது முதல் கணவர் கர்ணன் ஆகிய இருவரையும் தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

8வது திருணத்துக்கு புரோக்கர் மூலம் ஏற்பாடு

ஏழு பேரை ஏமாற்றி திருமணம் செய்த மாரியம்மாள், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த செல்வராஜ்-பழனியம்மாள் தம்பதியின் ஒரே மகள். முதல் கணவர் கர்ணனிடம் தனது பெயர் மாலதி என்று கூறியும், 7வது கணவரான செல்வகுமாரிடம் பவித்ரா என்று கூறியும் திருமணம் செய்துள்ளார். இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர். இவர்களது விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடைசியாக திருமணம் ெசய்த செல்வகுமாரையும் கை கழுவி விட்டு எட்டாவதாக இன்னொருவரை மணம் முடிக்க முயன்றபோது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார். 8வது திருமணத்துக்காக பட்டுப் புடவை, நகை உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த திருமண மோசடியில் ஏமாந்தவர்கள் யார், யார் என்பது குறித்தும், இதில் முதல் கணவர் கர்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மாரியம்மாளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
sinemet megaedd.com sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்