SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தான் பிடித்திருப்பதாக கூறி சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைபடுத்திய தந்தை

2016-06-13@ 15:51:19

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை தந்தையே இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் நேற்று காலை தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவனை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது.

இவரது தந்தை ஜோசப் இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும்,  இதனால் இரும்பு சங்கிலியை கல்லால் உடைத்து தப்பித்து சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்கு ரயிலில் ஏறியதாகவும் அச்சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். இதுகுறித்து தகவல் அறிந்த அச்சிறுவனின் தாயார் மேரி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

இதையடுத்து சிறுவனின் தாயார் மேரி கூறும்போது ‘அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடிப்பதாகவும் நான் தட்டிக்கேட்டால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டுவார் எனவும் தாயார் மேரி கூறினார். மேலும் எனது மகனின் இந்த நிலைக்கு என் கணவர் தான் காரணம் என தாயார் மேரி கூறினார்.

கடந்த 4 நாட்களுக்கு இரும்பு சங்கிலியை அறுத்து சிறுவன் தப்பியோட முயன்றபோது,  தந்தை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன்பு திடீரென சிறுவன் தப்பியோடிவிட்டான். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஏற்பாட்டின்பேரில் ஒரு காப்பகத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
cialis cvs coupon cialis coupon cialis 20mg
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

  • isisterrorbabies

    ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

  • 19-11-2019

    19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்