SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி

2016-06-07@ 01:43:30

ஸ்ரீநகர்: பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது. இந்நிலையில். சட்டப் பேரவைக்  கூட்டத்தில், சுயேட்சை உறுப்பினர் ஷேக் அப்துல் ரசீத்  அவையின் மையப் பகுதிக்குச் சென்று நாளிதழை காட்டி அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுபோன்று குடியிருப்புகள் எதுவும் கட்டப்படாது என முதல்வர் மெகபூபா முப்தி கடந்த  முறை கூறியதாகவும் ரசீத் கூறினார்.  இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் மெகபூபா பத்திரிகை செய்தியில் உண்மையில்லை என்றார். அதில் வெளியாகி  உள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு  என விளக்கம் அளித்தார்.

மாநிலத்தில் குழப்பைத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்த அந்த பத்திரிகை முயல்கிறதா என்றும் முப்தி கேள்வி எழுப்பினார். செய்தியை வெளியிடுமுன்  இது குறித்து விசாரித்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதி பிரச்னையாக்கி மாநிலத்தில் அமைதியை  சீர்குலைக்க  எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் ட்விட்டர் பதிவுகளுக்கு  அவர் கண்டனம் தெரிவித்தார். முதல்வராக இருந்த போது உமர், பாதுகாப்புப்படையினருடன் நான்கு முறை பேச்சு நடத்தி குடியிருப்புகளுக்கு இடம்  அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் கூறியதை மெகபூபா சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதில் அளித்த  உமர் அப்துல்லா,  தனது ட்விட்களால் முதல்வரின் மன நிலை பாதிக்கப்படும் என்றால் தான் அதை தொடர்ந்து செய்வேன் என்றார்.  குடியிருப்பு கட்ட அனுமதித்தால் அது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என உமர் கூறினார். மெகபூபாவும், உமர் அப்துல்லாவும்  பரஸ்பரம்  குற்றச்சாட்டுகளை கூறியதால் அவையில் கடும் அமளி நிலவியது. .

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

 • china_pramdanm1

  சீனாவில் அடுத்த பிரமாண்டம் : 39,000 சதுர மீட்டர் பரப்பிலான உலகின் மிகப்பெரிய கோளரங்கம் உருவாக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்