250 இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதி
2012-08-11@ 00:42:34

லாகூ: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல புறப்பட்ட 250 இந்துக்களுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு அனுமதியளித்தது.இந்தியாவில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குச் செல்ல 33 நாள் விசாவுடன் 250 பேர் புறப்பட் டனர். அவர்கள் பாகிஸ்தானில் பல இன்னல்களை அனுபவித்ததால் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப மாட்டார்கள் என்று அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் அந்த யாத்திரிகர்களை வாகா எல்லையில் அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சுமார் 7 மணி நேரம் அவர்களை பிடித்து வைத்திருந்தனர்.
சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், அவர்கள் எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக பேச மாட்டோம். பாகிஸ்தானின் பெருமையை குலைக்கும் வகையில் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்ததன்பேரில் அவர்கள் இந்தியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி
பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு
2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்
அமெரிக்காவில் மராத்தான் போட்டியின்போது பெண் நிருபரின் பின்னால் தட்டிய அமைச்சர் கைது
சபரிமலையில் தரிசனத்திற்கு 14 மணி நேரம் காத்திருப்பு : உணவு இன்றி பக்தர்கள் தவிப்பு
இந்தியாவில் மத சுதந்திரம் காக்கப்படுமா? : அமெரிக்கா கவலை
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை