SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை

2016-05-28@ 00:24:39

மும்பையைச் சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்சவசரி என்ற அமைப்பு நாடு முழுவதும் 40 நகரங்களில் உள்ள 7710 கல்வி நிறுவனங்களைப்பற்றிய  ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கல்வித்தரத்தை  மதிப்பிடுவதற்கான அளவீடுகளில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி முன்னிலை வகிக்கிறது.  என்று டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே தெரிவித்துள்ளார். இதைப்பற்றி சென்னைஸ் அமிர்தாவின் முதன்மை  செயல் அதிகாரி பூமிநாதன் கூறியதாவது: படிப்பதற்கான வசதிகள்: இந்தியாவில் கல்வித்துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான  கல்லூரிகள் உள்ளன. அதைப்போல உணவு கலாச்சாரத்தையும் விருந்து  உபச்சாரத்தையும் கையாளுகிற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையும் தனிச்சிறப்பான வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னைஸ் அமிர்தா  இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படிப்பதற்கான வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவ்வசதிகள்  மாணவர்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே வேலையில் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகத்தரமான கல்வி: இந்தியாவில்  கிராமப்புற அளவிலும் உலகத்தரமான தொழிற்கல்வியை அளித்து அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் நோக்கம்.

தற்போது நாங்கள்இந்திய அளவில் உயர்ந்த கல்வித் தரத்தையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நம்பிக்கையையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியை  அளிக்கிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக  இளைஞர்களின் மீது கவனம் செலுத்தினார். அதைப்போல  எங்கள் கல்வி நிறுவனமும் 1000க்கும் மேற்பட்ட தகுதியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களைக்  கொண்டு மாணவர்களிடம் மறைந்திருக்கும் அவர்களது தினத்திறமைகளை வெளியே கொண்டு வர முயற்சித்து வருகிறது. மேலும் ஆங்கிலம், இந்தி,  பிரெஞ்ச் என்று பல மொழிகளில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி, 100 சதவீதம் உறுதியான வேலைவாய்ப்பு, சமுகத்தில் மதிப்பான வாழ்க்கை ஆகியவற்றை  மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிறது.

முக்கியமாக மாணவர்கள் படிக்கும்போதே பகுதி நேர ேவலைவாய்ப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை  சம்பாதிக்கப்படுகிறது. சென்னைஸ் அமிர்தாவின் தனிச்சிறப்பான அம்சம் என்று சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்  கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார். மும்பை நிறுவனம் பாராட்டு: இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கல்வி  நிறுவனங்கள் பற்றிய ஆய்வின்படி, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி உயர்ந்த  கல்வித்தரத்தை கொண்டிருப்பதாக மும்பையில் செயல்பட்டு வரும் டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே  கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த ஆய்வானது கல்விமுறை, ஆசிரியர்களின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களைஅடிப்படையாக கொண்டு  நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான கல்வி நிறுனத்தை தேர்வு செய்வதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று கருத்து  தெரிவித்துள்ளார்.

sinemet go sinemet
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramalan_sirapu111

  இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

 • cake_decor11

  ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

 • RajivGandhi27thanniversary

  ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

 • lasvegas_theme111

  அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

 • rajiv_27anni

  27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்