SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் மாணவர்களை மனித வளங்களாக மாற்றுவதற்கான உலகத்தர கல்வி

2016-05-28@ 00:24:37

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்தட்டு மாணவ, மாணவிகள் சிறந்த கல்வி பெறுவதற்காக ஏ.சி.சண்முகம் என்பவர் கடந்த 1986ம் ஆண்டு  கண்ணம்மாள் அறக்கட்டளையை தோற்றுவித்தார். இந்த அறக்கட்டளை வாயிலாக 1988ம் ஆண்டு AICTE ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல்  கல்லூரி தொடங்கப்பட்டு, 1988 முதல் 1999ம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழும், 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் அண்ணா  பல்கலைக்கழகத்தின் கீழும் சிறப்புடன் செயல்பட்டு வந்தது. 2003ம் ஆண்டு முதல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை  மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டதால் இரண்டையும் அங்கமாக கொண்டு பல்கலைக்கழக  மானியக்குழு மற்றும் இந்திய அரசாங்கத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்று மிகச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், ஜெர்மன் நாட்டின் மிகச்சிறந்த TUV SUD நிறுவனத்தால் அனைத்து வகையிலும் தரமான சிறந்த நிறுவனம் என்று ISO 9001: 2008  தரச்சான்றிதழ் வழங்கப் பெற்றுள்ளது. பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோயை குணப்படுத்தவும், அப்புற்று நோயின் செல்களை தாக்கி அழிக்கவும்  பல்வேறு ஆராய்ச்சிகளை எங்கள் ஆய்வுக்கூடத்தில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக மார்பக புற்றுநோய்க்கு Toll-Like Receptor  (TLR) என்ற சமிக்கைகளின் தூண்டுதலை உபயோகித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதுஎவ்வாறு புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது  என்று ஆய்வு மேற்கொள்ள புதுடில்லியுள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Dept. of Science & Technology)  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (Science and Engineering Research Board) துரித ஆராய்ச்சி என்ற திட்டத்தின்  மூலம் ரூ.24 இலட்சம் நிதி உதவியளித்து ஆய்வுகள் நடத்த அனுமதியளித்துள்ளது.

இந்திய அரசு பாதுகாப்புதுறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) நவீன ஆராய்ச்சி கூடம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும்  ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நவீன ஆராய்ச்சி மையத்திற்காக (ARI)  அக்னி ஏவுகணைகளை பாதுகாப்பாகவும் சிறந்த  முறையில் செலுத்தவும் “ராக்கெட் மோட்டாருக்கான உட்புற வடிவமைப்பு திட்டம்”  என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அங்கீகாரம்  அளித்துள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் கல்வி கிரேடிங்/ கிரிடிட் முறையில் வழங்கப்படுகிறது. பல்வேறு தொழில் மற்றும் வெளிநாட்டு  பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்கள் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலையின் இலக்கு, இக்கல்வி நிறுவனத்தை பொறியியல் பல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறையில் உயர் அளவிலான பயிற்றுவித்தல் மற்றும்  கற்றுக்கொள்வதற்கான ஆதார மையமாக உருவாக்குவது ஆகும். இதனால் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த பயிற்சியையும், கல்வியையும் வழங்கி  அவர்களை தொழில்நுட்ப ரீதியாக தகுதி படைத்தவர்களாகவும் நடைமுறை செயல்களில் சிறப்பாக செயல்பட தக்கவர்களாகவும் நுனுக்கமான திறமைகள்  படைத்த மனிதவளங்களாக பொலிவுபெற செய்யமுடியும். அவைமட்டுமல்லாது, தொழில் ரீதியாக செய்யத்தகுந்தவை, தகாதவை பற்றி எடுத்துக்கூறி  இளைய தலைமுறையினர் தொழில்வல்லுனராக மாறுவதற்குதக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்நிறுவனம் உறுதுணை புரிகிறது.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்