SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பொறியியலுக்கு இன்னமும் மவுசு: ஏகப்பட்ட படிப்பு; கைநிறைய சம்பளம்

2016-05-28@ 00:24:35

* சரியான பிரிவே முக்கியம்
* எந்த கல்லூரியும் நல்லது தான்

பொறியியல் படிப்பை பொறுத்தவரை இன்னமும் மவுசு குறையவில்லை; சரியான வேலையில்லை என்று சிலர் சொன்னாலும், ஏன் வேலை  கிடைக்கவில்லை என்பதையும்  ஆராய வேண்டியது முக்கியம். படிக்கும் போது சராசரி மாணவனாக இருந்தாலே போதுமானது; கண்டிப்பாக கைநிறைய  சம்பளத்துடன் வேலை நிச்சயம்.  கடுமையான உழைப்பு,  விடா முயற்சி, திறமையை வளர்த்து ெகாள்ளும் பக்குவம் போன்றவை இருந்தாலே வேலை  நிச்சயம் மட்டுமல்ல; எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். இந்த லாவகத்தை மாணவர்கள் புரிந்து கொண்டாலே போதும் எந்த படிப்பும் சுலபமே;  வேலையும் கடினமே அல்ல.  பொறியியல் படிப்புகளில் எல்லா பிரிவுகளும் நல்ல  படிப்பு தான்; கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்,  எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம்  இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்க  பிரிவுகள்.

பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை,  எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா  என்பது  எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத  மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக்  கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும்  அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.

பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க  வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக  மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின்  மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5  கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்காக ெசன்று அங்கிருக்கு சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து  தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை  பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்