SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது சவால் அல்ல

2016-05-28@ 00:24:29

மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆர்வமும், ஆசையும்  இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதிக மதிப்பெண், போட்டி தேர்வுகளில் முதலிடம், கட்ஆப் மதிப்பெண் என அதில் இருக்கும் சவால்கள்  ஏராளம். அனைத்திலும் வெற்றி பெற்று, குறிப்பிட்ட சிலரால் மட்டுமே மருத்துவ படிப்பை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள்  கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து  படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம்  வருமானம், மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம்.

 ப்ளஸ் டூவில் அறிவியல் பிரிவை (ஃபர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன.
 நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3  ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன்  போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங்  படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.

ஃபிசியோதெரபி:  உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவமான ஃபிசியோ தெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால்  அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. ஃபிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக  பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும். ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப் படிப்பு. பேச்சு  மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு  என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய்  ஈட்டலாம்.

எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப்  படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனை கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை  சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றைக் கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும்.
 பார்மஸி:  மருந்து, மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம்.  அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி.  4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம்  சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.

லேப் டெக்னீஷியன்:  ஓராண்டு பட்டயப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், இரத்தப்  பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம். ரேடியோ கிராஃபி: இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல்  அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்டயப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடிஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம்  போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.

ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி ஆகும். இது ஓராண்டு பட்டயப்படிப்பு. சற்றேறக்  குறைய பிசியோதெரபி போன்றது. ஆனால் இது மூளையையும் இயக்கும் படிப்பு. இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித  சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது. ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும்  பற்றிய படிப்பு ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்