இயக்குனர் பிரியதர்ஷனுடன் மீண்டும் இணைவது ஒரு போதும் நடக்காது: நடிகை லிசி உறுதி
2016-05-25@ 00:39:08

திருவனந்தபுரம்: பிரியதர்ஷனுடன் மீண்டும் இணையப் போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று நடிகை லிசி கூறியுள்ளார். பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணையப் போவதாக கேரள பத்திரிகைகளில் செய்தி வெளியாயின. இதை லிசி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நானும் பிரியதர்ஷனும் மீண்டும் இணையப் போவதாக சில பத்திரிகைகள் பொய் பிரசாரம் செய்து வருகிறது. அவருடன் மீண்டும் இணைவது என்பது ஒரு போதும் நடக்காத சம்பவம். நாங்கள் எதற்காக பிரிய தீர்மானித்தோம் என்பது எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் நீதிமன்றதுக்கும் மட்டுமே தெரியும். விவாகரத்துக்கான காரணங்களை மாற்ற முடியாது. நான் அனுபவித்த வேதனைகள் எனக்கு மட்டும்தான் தெரியும். எதற்காக நான் வேதனைகளைச் சகித்துக் கொண்டேன் என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது. எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னைகள் குறித்து பல முறை பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் சில ஊடங்கள் என்னைத் தேவையில்லாமல் புண்படுத்தி வருகின்றன.
கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா? இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தலில் 63 சதவீதம் வாக்குப்பதிவு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது: பகல் 12 மணிக்குள் முடிவு தெரியும்
கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க பிரதமர் கோரிக்கை
ஐதராபாத் என்கவுன்டர் விவகாரம்: நீதி வழங்குவது ஒருபோதும் உடனடியாக இருக்க கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
பலாத்காரம் செய்தவர்களால் எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: ஐதராபாத்தை தொடர்ந்து உபி.யில் சோகம்
தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா?: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்