SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் பள்ளி மாணவர்களின் சாதனை

2016-05-22@ 00:44:51

பெரம்பூரில் உள்ள கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் பள்ளி மாணவர்கள் 2015-2016ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை  படைத்திருக்கிறார்கள். அப்பள்ளியை சேர்ந்த கிறிஸ்டினாஜூலி தமிழை முதற் பாடமாக கொண்டு 1200க்கு 1184 மதிப்பெண் பெற்று, சென்னை மாவட்டத்தில்  மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். குடிவாடாஹிமஜா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை  பிடித்திருக்கிறார். லாவண்யா மற்றும் ஹிரிபிரியா என்ற மாணவிகள் வணிகவியல், கணக்குப் பதிவியியல், வணிகக் கணிதம் மற்றும் பொருளியல் எனும்  4 பாடங்களிலும் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், அறிவியல் பாடப்பிரிவில் ரேஷ்மாஷர்மா என்ற மாணவி 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் கணித பாடத்திலும் 200/ 200  மதிப்பெண் பெற்றுள்ளார். 27 மாணவர்கள் வணிகவியல், கணிதம், வணிக கணிதம், கணக்கு பதிவியியல், பொருளியல் போன்ற பாடங்களில் 200/200  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1100க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 75 விழுக்காடு  (Distinction) மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பதினோராம் வகுப்பில் சேர்க்கை அளித்து அம்மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி  அளிக்கப்பட்டு 12ம் வகுப்பு தேர்வில் அவர்களை 75 விழுக்காடு (Distinction) மதிப்பெண்கள் பெற வைக்கிறது பள்ளி நிர்வாகம். மேலும், நூறு விழுக்காடு  மாணவர்களை தனித்தன்மை பெற்றவர்களாக தேர்ச்சிஅடையச் செய்கிறது கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்