SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் 2 டைம்பாம் சிக்கியத

2012-08-05@ 05:03:58

மதுரை: மதுரையில் நேற்று மர்ம பார்சல்களில் வந்த 2  டைம் பாம்’ சிக்கியது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை குறிவைத்து டைம் பாம் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் நகைப்பட்டறை, பாத்திர கடை வைத்திருப்பவர் உமர்பாரூக் (30). நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு உமர்பாரூக், தனது கடையை மூடிவிட்டு, ரமலான் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்றார்.  இந்நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், உமர்பாரூக் கடைக்கு எதிரில் நகைப்பட்டறை நடத்தி வரும் ஆறுமுகம்(55) என்பவரை சந்தித்தார். அவரிடம் இரு பார்சல்களைக் கொடுத்தார். உமர்பாருக்கிடம் போனில் பேசியபோது உங்களிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார் என்றார். அவரது பேச்சை நம்பி 2 பார்சல்களையும் ஆறுமுகம் வாங்கி வைத்துக் கொண்டார்.  நேற்று காலை கடை திறக்க வந்த உமர்பாரூக்கின் மேலாளர் முகம்மது இஸ்மாயிலிடம் இந்த பார்சல்களை ஆறுமுகத்தின் ஊழியர் குருபாலாஜி (15) கொடுத்தார். பார்சலை பார்த்தபோது அனுப்புனர், பெறுனர் முகவரி இல்லாமல் கனமாக இருந்துள்ளது. பார்சலை பிரித்தபோது, அதில் டைமர் இணைப்புடன் வெடிகுண்டு இருந்தது. அது சரியாக பகல் 12.30 மணிக்கு வெடிக்கும் வகையில் நேரம் செட் செய்யப்பட்டிருந்தது.   இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார், தெற்குவாசல் போலீசார்,

வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்து வந்தனர். வெடிக்கும் நிலையில் இருந்த குண்டை உடனடியாக செயலிழக்க செய்தனர்.  மற்றொரு பார்சலை திறந்து பார்த்தபோது அதற்குள் இணைக்கப்படாத நிலையில் பேட்டரி, நூல் கொண்டு சுற்றப்பட்ட வெடிமருந்து, கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் தனித்தனியாக இருந்தன. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.  கடையை நடத்தும் உமர்பாரூக் மற்றும் பார்சல் வாங்கிவைத்த ஆறுமுகம் உட்பட சம்பந்தப்பட்ட 4 பேரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மதுரையில் அகில உலக சவுராஷ்டிரா 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை.  உமர்பாரூக்கின் கடை இருக்கும் காம்ப்ளக்ஸ், சவுராஷ்டிரா சங்கத்திற்கு சொந்தமானதாகும். மேலும் இந்த காம்ப்ளக்ஸ்க்கு அடுத்த காம்பவுண்டில்தான் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. இக்கோயிலும் சவுராஷ்டிரா சங்கத்திற்கு சொந்தமான கோயில்தான். எனவே மோடி வருகையை எதிர்நோக்கியே இந்த சதிச்செயல் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டுமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவங்கள் ஆறிலும் ஒரே கும்பல்தான்

மதுரையில் கடந்த காலங்களில் இரு அரசு பஸ்களில் இதுபோன்ற டைம் பாம்கள் மீட்கப்பட்டன. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் பாரிலும், மதுரை கிழக்கு அண்ணாநகர் ராமர் கோயில் வளாகத்தில் சைக்கிளில் டைம் பாம்கள் வெடித்தன.  இதற்கு முன்னதாக மதுரைக்கு அத்வானி வருகையின்போது ஆலம்பட்டி பாலத்தின் கீழ் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு மீட்கப்பட்டது. இவ்வரிசையில் 6ம் முறையாக தற்போது டைம் பாம்கள் சிக்கியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த 6 சம்பவங்களிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் பாம்களை, பைப் குண்டை உருவாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்தனை சம்பவங்களிலும் ஒரே கும்பல் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு வலுத்துள்ளது.

கம்ப்யூட்டரில் படம்

டைம் பாம் பார்சல்களை கொடுத்துச் சென்ற வாலிபரின் முக அமைப்பு குறித்து நகைப் பட்டறைக்காரர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில் அந்த வாலிபரின் படத்தை கம்ப்யூட்டர் மூலம் போலீசார் வரைந்து வருகின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் டிபன் பாக்சில் வைத்தே டைம் பாம் செட் செய்யப்பட்டிருக்கிறது.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்