Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மதுரை டாக்டரின் லீலைகள் அம்பலம



மதுரை : பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் கைதான மதுரை டாக்டரின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மருத்துவமனை பூட்டப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபத்தை சேர்ந்த மணிமாறன் மகள் ராதா, பிளஸ் 2 மாணவி. இவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகரில் உள்ள கேகே ஆஸ்பத்திரிக்கு உறவினர் துணையுடன் சிகிச்சைக்கு சென்றார். அந்த மருத்துவமனை டாக்டர் சங்கரநாராயணன் (52), இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை என்ற பெயரில், தனி அறையில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் டாக்டரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர் குறித்து நோயாளிகள், நர்சுகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. Ôடாக்டர் சங்கரநாராயணன், தன்னை இளமையுடன் காட்டுவதற்காக 25 ஆயிரம் மதிப்புள்ள விக் அணிந்து, எப்போதும் மேக்அப்புடனே இருந்துள்ளார். வீட்டோடு கிளினிக் இருந்தாலும், குடும்பத்தினரை எப்போதும் வெளியூரில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்.

இவரது கிளீனிக்கில் முன் பகுதியில் பீரோ போன்ற ரேக்கை திறந்தவுடன் ஒரு அறை உள்ளது. அந்த அறைக்குள் சிகிச்சை அளிப்பது போல் பெண் நோயாளிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பலரிடம் தனது பர்சனல் போன் எண்ணை கொடுத்து எப்போது வேண்டுமானாலும் பேசச்சொல்வாராம். நோய் குணமடைந்தாலும் டிஸ் சார்ஜ் செய்வதில்லையாம். குளுக்கோஸ் மற்றும் ஊசியில் மயக்க மருந்து செலுத்தி, அரை மயக்கத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

டாக்டரின் லீலை களை தெரிந்த நர்சுகள் வேலையைவிட்டு ஓடிவிடுவர். இதனால், புதிது, புதிதாக நர்சுகள் வேலைக்கு வருவதும், செல்வதும் வாடிக்கையாக நடந்து வந்துள்ளது.
சில்மிஷம் செய்வதை அறிந்து நோயாளிகள் சத்தம்போட்டால் அவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் டாக்டர் தயங்குவதில்லை. இதனால் பல நோயாளிகள் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் பிரச்னையை பெரிதுபடுத்தாமல் விட்டுள்ளனர். இதை டாக்டர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்த ராதாவிடமும், அவரது உறவினர்களிடமும் மாறி மாறி கால்களில் விழுந்து டாக்டர் கதறி அழுததுபோல் நடித்துள்ளார். ஆனாலும் உறவினர்கள் விடாமல் பிரச்னையை போலீசுக்கு கொண்டு சென்று விட்டனர்.  

இந்நிலையில், பலாத்கார சம்பவம் நடந்த கேகே மருத்துவமனை பூட்டப்பட்டது. அங்கு விரைவு அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பணியாற்றிய நர்சுகளும், சிகிச்சையில் இருந்த நோயாளிகளும் வெளியேறிவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி ராதா மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதனிடையே சங்கரநாராயணனின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனால், அவரது மருத்துவர் பட்டத்தை மருத்துவ கவுன்சில் ரத்து செய்யும் என மூத்த மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News

செய்திகள்

Advertisement
Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement
Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

29

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
முடிவுகள்
உதவி
தெளிவு
பொறுமை
அனுகூலம்
கம்பீரம்
அந்தஸ்து
அறிவு
வெற்றி
மீட்பு
ஈகோ
எதிர்மறை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran