SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு

2016-04-12@ 01:51:28

மதுரை : மதுரை பீபீ குளத்தில் உள்ள மத்திய அரசின் கலால் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மீது லஞ்ச புகார் எழுந்தது. இதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் முருகன், பாலசந்தர் ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர் அசோக்ராஜ், ஹவில்தார் கிருஷ்ணன் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன், அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்து சென்றது. தாக்குதலில் காயமடைந்த சிபிஐ அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்