SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயம் செழித்து செல்வம் பெருக விளக்குமாறு காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்

2016-04-11@ 11:45:11

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே புனித தோமையார் ஆலயத்தில், விளக்குமாறை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். திண்டுக்கல் அருகே தோமையார்புரத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. சிறுநாயக்கன்பட்டி பங்கிற்கு உட்பட்ட இந்த ஆலயம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலய திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருப்பலியுடன் புனிதர்களின் ரதபவனி நடைபெற்றது. விழா நிறைவு நாளான நேற்று விளக்குமாறு காணிக்கை செலுத்தும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. விளக்குமாறை காணிக்கையாக செலுத்தினால் உடலில் ஏற்படும்  பருக்கள், தோல் வியாதி சரியாவதுடன், விவசாயம் செழித்து குடும்பத்தில் செல்வம் பெருகுவதாக நம்பிக்கை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் விளக்குமாறு, மெழுகுவர்த்தி, உப்பு மிளகு, தானியம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்ட பரிபாலகர் ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை ஜூலியஸ் அருள்ராயன், ஊர்மணியம் சகாயராஜ், நாட்டாண்மை ஜேம்ஸ், சேர்வை சவேரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

drug coupon card prostudiousa.com drug discount coupons
sinemet megaedd.com sinemet
venlafaxine forum click venlafaxine 150
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்