SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

61 கிலோ எடையை 1 கி.மீ உயரம் தூக்கி உலக சாதனை படைத்த 'மெகாட்ரோன்'

2016-04-01@ 14:42:13

சாதனையை முறியடிக்கும் விதமாக தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் மல்டிகாப்டர் என்ற ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள், இதே கட்டமைப்பின் அடிப்படையில் அக்டோகாப்டர் என்ற விமானத்தில் ஒரு நபரை பறக்க வைக்க முடியும் என்று நம்புவதாக தெரிவித்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவ குழுவினர், மெகாகாப்டர் என்று அழைக்கப்படும் பெரிய ஆளில்லாத வான்வழி வாகனத்தை (யூஏவி) 18 மாத இடைவெளியில் உருவாக்கியுள்ளனர்.

அலுமினியம் மற்றும் ஒட்டு பலகை (plywood)ல் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு ஃபிரேமில் மொத்தம் 48 மோட்டார்கள் அமைந்துள்ளது. இதன் மூலம் 13 ப்ராபெல்லர்ஸ் (propellers) மற்றும் எட்டு ஹெக்சாகாப்டர் இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் விலை நார்விய குரோனேவில் 200,000க்கும் மேல் ($ 21,600 அல்லது £ 15,000) ஆகும். கடந்த அக்டோபர் மாதம் இந்த ஆளில்லா விமானம், 37 வினாடிகளில் 61 கிலோ (134 எல்பி 7.6oz) சுமையை ஒரு மீட்டர் உயரம் வரை தூக்கி பறந்து உலக சாதனையை முறியடித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தில், முதலில் 73 கிலோகிராம் சுமையை உயர்த்த முயன்றனர். அது முடியாததால், அதன் எடையை குறைக்கப்பட்டதன் மூலமாக எளிதாக பறந்து சாதனையை முறியடித்தது (61 கிலோ எடைக் கொண்ட சுமையை 37 விநாடிகள் தரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிக் கொண்டு உயரமாக பறந்தது). இதில் 48 மோட்டார்கள், 48 ப்ராபெல்லர்ஸ் உள்ளது மற்றும் அந்த 48 ப்ராபெல்லர்சில் எட்டு குழுக்கள் குழுவாக கொண்டுள்ளது. ஒவ்வொரு எட்டு குழுக்களிலும் ஆறு மோட்டார்கள் உள்ளன, அந்த மோட்டார்கள் எல்லாம் ஒரே வேகத்தில் இயங்கக்கூடியது.

அந்த விமானத்தில் எட்டு வெளியீடுகள் உள்ளது, அவை அனைத்தும் தனித்தனியாக கட்டுப்படுத்தப்படுபவை. அதனால் விமானமத்தை கட்டுப்படுத்துபவர் இதில் எட்டு மோட்டார்கள் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பார். மேலும் இதில் 24 பேட்டரிகள் உள்ளடங்கியுள்ளதால், ஒவ்வொரு எட்டு குழுக்களும், சரியாக மூன்று பேட்டரிகளை பகிர்ந்து கொள்கிறது.

prescription coupon card viagra online coupon viagra online coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்