SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சூரில் சர்ச்சுக்குள் வைத்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் பாஸ்டருக்கு 40 ஆண்டு கடுங்காவல்

2016-03-02@ 00:59:34

திருவனந்தபுரம்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே.ஜேம்ஸ் (37). திருச்சூர் பீச்சில் உள்ள இரட்சணிய சேனை சர்ச்சில்  பாஸ்டராக உள்ளார். அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்கிருந்த 12 வயது  சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்.

இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர்  ெதரிவித்தார். இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல்  தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்ேறார் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர்  சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40  வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்