SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுதல் கவனம் தேவை

2016-02-25@ 02:29:39

தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற தேர்தல் திருவிழா களைகட்ட  ெதாடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர் தேர்விலும் மும்முரமாக உள்ளன. தேர்தல் ஆணையமும் தங்களது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அரசியல் களமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் அரசின் பங்கு முக்கியமானதாகும். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் 16 கொலைகள் நடந்துள்ளன. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையை அரசு தான் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதில் வருவாய்த்துறை முதல் காவல் துறை வரை அனைத்து துறைகளின் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்ற முடியும். ரவுடியிசம் தலை தூக்கினால் பெண்கள், முதியோர் வாக்களிக்க வருவதில் சிக்கல் ஏற்படும். இங்கு நடந்த கொலைகளில் பல சொந்த பிரச்னைக்காக நடந்திருந்தாலும், அவை தடுக்கப்பட வேண்டிய ஒன்றே.

ஒரு மாவட்டத்தில் ெதாடர்ந்து கொலைகள் நடந்தால், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு அது எல்லா வகையிலும் எதிரொலிக்க தொடங்கிவிடும். ஏனென்றால், தேர்தல் வந்துவிட்டால் போலீசாரின் கவனம் தேர்தல் களத்தில் இருக்கும். அப்போது சமூக விரோதிகளும், ரவுடிகளும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு விளையாட்டு காட்டுவார்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அரசு கண்டறிந்து தடுத்த நிறுத்த வேண்டும். உ.பி., பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்த மாநிலமே ரவுடிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலம் உண்டு. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதனால் அங்குள்ள வேட்பாளர்களும் நிம்மதியாக பிரசாரம் செய்ய முடியாது. வாக்குப்பதிவும் அமைதியாக நடைபெறாது. ஆனால் அந்த கலவரபூமியிலேயே இப்போது நிலமை சரியாகி விட்டது. பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட குறிப்பிட்டு சொல்லும்படியான  நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.ஆனால் அமைதி பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தில், தேர்தல் நெருங்கும் வேளையில் அதுவும் ஒரு மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை என்றால் சட்டம் ஒழுங்கை பற்றி சற்று சிந்திக்க வேண்டியதுள்ளது. தற்போது கொலைக்களமாக மாறிவரும் தென்மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு கொண்டு செல்வதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர். இது தேர்தல் நேரத்தில் சமூக விரோதிகளுக்கு சாதகமாகிவிடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

உம்... என்றால் கூட சாதி பொறி பறக்கும் நெல்லை, தூத்துக்குடி போன்ற பதற்றமான மாவட்டங்களில் போலீசார் எந்த நேரமும் உஷாராக இருக்க வேண்டும். அப்போது தான் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கு நிலையை உறுதி செய்வது அரசின் தலையாய கடமையாகும்.

amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்