SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமா விழிப்புணர்வு?

2016-02-24@ 01:25:25

மருத்துவ காரணம் கருதி (தாயின் நலம் கருதி) உண்டாக்கப்படும் சிகிச்சை முறை கருக்கலைப்பு. பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்லைப்பு ‘தேர்வு கருக்கலைப்பு’ எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பம், படிப்பில் ஏற்படக்கூடிய இடைஞ்சல், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றவை கருக்கலைப்புக்கு காரணமாகின்றன.

 தற்கால மருத்துவத்தில், மருந்து கொடுப்பதினாலும், அறுவை சிகிச்சை மூலமும் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுவதும் நடக்கிறது. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள், கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்கு சமமானது, அதை அழிப்பது கொலை குற்றத்துக்கு சமமானது என வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனை சுமக்கும் பெண்ணின் உரிமை என்கிறார்கள் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.

ஒவ்வொரு நாட்டிலும், சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளை கையாண்டு கருக்கலைப்பு செய்யப்படுகிறது. ஆனாலும், உலகளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் இறக்கின்றனர். உலகளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 4.4 கோடி கருக்கலைப்புகளில், கிட்டத்தட்ட பாதி கருக்கலைப்பு பாதுகாப்பற்றதாக உள்ளது.கர்ப்ப காலத்தின் முதல் 20 வாரங்களுக்குள் தானாகவே கரு அல்லது முளையம் அல்லது முதிர்கரு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது தான்தோன்றி கருச்சிதைவு எனப்படும். குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய விழிப்புணர்வு பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த காரணத்தால், அண்மை காலங்களில் கருக்கலைப்பு நிகழ்வு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்த சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில், கடந்த 20 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, வடகிழக்கு மாநிலங்களான அசாமில் 19.9 சதவீதம், மேகாலயாவில் 14.9 சதவீதம், மணிப்பூரில் 10.9 சதவீதம் சட்டப்பூர்வ கருக்கலைப்பு நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 7.9 சதவீதம் கருக்கலைப்பு நடந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் தலா 1.9 சதவீதம் கருக்கலைப்பு நடந்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 20 ஆண்டு காலத்தில், ராபர்ட் ஜான்ஸ்டன் என்ற அமைப்பு சேகரித்த புள்ளிவிவரத்தில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்ைனயில் சட்டப்பூர்வ கருக்கலைப்பு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2011ல் 10,293 பேர், 2012ல் 10,920 பேர், 2013ல் 12,076 பேர், 2014ல் 13,328 பேர், 2015ல் 13,374 பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இல்வாழ்க்கையில் தோல்வி, பாலியல் பலாத்காரம், திட்டமிடப்படாத தாம்பத்யம் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த கருக்கலைப்பு நடந்துள்ளது. கருக்கலைப்பு செய்வது கர்ப்பிணிகளின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் இந்த சட்டப்பூர்வ கருக்கலைப்பு நடக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுனர்கள். பள்ளி முதலே பாலியல் கல்வி பாடத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும், மாணவர்களிடம் பாலியல் கல்வி பற்றிய அறிவை புகட்டினால் மட்டுமே வருங்காலத்தில் கருக்கலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். தமிழக அரசின் கல்வித்துறை மற்றும் சுகாதார துறை இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதை துரிதமாக செய்தால் கருக்கலைப்பு சதவீதத்தை அடியோடு குறைக்க முடியும்.

coupons for cialis printable read free discount prescription cards
rite aid load to card coupons link rite aid store products
venlafaxine forum click venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்