SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதினெட்டுக்கு கீழ்...உஷார்

2016-02-23@ 00:52:44

ஒவ்வொரு பத்தாண்டும் எவ்வளவோ மாற்றங்களை கொண்டு வந்து விட்டது. நகர, கிராம மக்களின் வாழ்க்கை முறை முதல் தொழில்நுட்ப வசதிகள் வரை ஏராளமாக மாறி விட்டன. இன்னமும் மாறி வருகின்றன.  மோட்டார் வாகனங்களின் உற்பத்தியும், அதன் பயன்பாடும் வியக்கத்தக்க வகையில் பெருகி வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும்கூட வாகனங்கள் அபரிமிதமாக பெருகிவிட்டது. அதற்கேற்ப வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் தினமும் அதிகரிக்கிறது. விபத்து ஏற்படாமல் இருக்க, என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பலரும் உணருவதில்லை.

விபத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் யாரும் கவனத்தில் ெகாள்ளாத ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை அரசும், சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தில் ஆரம்பித்து போக்குவரத்து போலீசார் வரை பெரிதாக கண்டு கொண்டதே இல்லை. மோட்டார் வாகனங்களை இயக்க, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. உரிய பரிசோதனைக்கு பிறகே மோட்டார் வாகன ஆய்வாளரால் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் எனவும் இச்சட்டம் கூறுகிறது. ஆனால், நம் நாட்டில் 18 வயது பூர்த்தி ஆகாத இளைஞர்கள் ேமாட்டார் வாகனம் ஓட்டும் சிறுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பள்ளிக்கு, டியூசன் படிக்க, பக்கத்தில் உள்ள கடைக்கு செல்ல, பொழுது போக்கு இடங்களுக்கு செல்ல என எதற்கெடுத்தாலும் ஸ்கூட்டர், பைக்  என்று மோட்டார் வாகனங்களை சிறுவர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்ட அனுமதிக்கின்றனர். இது  எந்த அளவுக்கு விபரீதத்தில் கொண்டு  போய் விடும் என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்  அஜாக்கி ரதையாக மோட்டார் வாகனம் ஓட்டியதால், தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு 1,582 சாலைவிபத்துகள்;  அதற்கு முந்தைய ஆண்டு 2,068 சாலைவிபத்துகள் நடந்துள்ளன. 18 வயதுக்கு குறைவான நபர்கள் வாகனம் ஓட்டிச்செல்லும்போது, 15 முதல் 33 மடங்கு விபத்து அதிகரிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பதினெட்டு வயதுக்கு குறைவான இளைஞர்கள் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்தினால் அவர்களுக்கு பதிலாக, அவர்களது பெற்றோர் தண்டிக்கப்பட வேண்டும் என கடந்த 2008ம் ஆண்டு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இருப்பினும், இதில்  விதிமீறல் தொடர்கிறது. இந்திய அளவில், கடந்த 2013-ம் ஆண்டில், மொத்தம் 4,86,476 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 4,94,893 பேர் காயம் அடைந்துள்ளனர். 1,37,572 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக, உத்தரபிரதேசம் (16,004), தமிழ்நாடு (15,563), ஆந்திரம் (14,171), மகாராஷ்டிரம் (13,029), கர்நாடகம் (10,046) மாநிலங்களில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

சாலை விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக வரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் இந்த அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக்கொண்டே ஓட்டினால் ரூ.5,000, தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து என இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளை தடுக்க, மத்திய அரசு, கடுமையான சட்ட விதிகளை உருவாக்கினால் மட்டும் போதாது. வாகனம் ஓட்டும் ஒவ்வொரு தனி நபரிடமும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அப்படி உருவானால் மட்டுமே விலைமதிப்பற்ற உயிரிழப்பை தடுக்க முடியும்.

cialis cvs coupon cialis coupon cialis 20mg
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்