SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீர்வா... தீர்ப்பா?

2016-02-22@ 01:28:44

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இன்று நேற்றல்ல, பல காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதும், தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. அதோடு, வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும் இப்பிரச்னையில் உரிய தீர்வு காணாமல் இருக்கின்றன.

இந்த நிலையில் கடலில் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதை தடுக்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில்
நிைறவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆலை கழிவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் மீன் வளம் குறைந்து விட்டது. இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சில சமயம் நல்ல மீன் தேடியோ, அல்லது எல்லை எதுவென்று அறியாமலோ தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 1078 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையில் கடலை நம்பி வாழும் மீனவர்கள் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர். விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடல் பகுதி வரை சென்று மீன்பிடிக்க முடியும. ஒரு விசைப்படகு மாலை முதல் மறுநாள் காலை வரை மீன்பிடிக்கச்சென்று வலை விரித்தால் சாதாரணமாகவே 20 கடல் மைல் தூரம் வரை சென்று விடும்.

இது கடல் நீரோட்டத்தை பொறுத்தே அமைவதால், மீனவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ எந்த திட்டமிடலும் இல்லாமலேயே எல்லை தாண்டுதல் நடந்து விடுகிறது. 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக மீனவர்கள் மீது முதல் துப்பாக்கி சூடு நடத்தியது. அதன்பிறகு ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டனர். தற்போது பல்வேறு அரசியல் நிர்பந்தங்களால் கொலைச்செயல் அரங்கேறுவதில்லை.

இப்படி இலங்கையின் அடாவடி செயல்கள் இருக்கும் நிலையில், தமிழக மீனவர்களை அரவணைக்க வேண்டிய அரசே அவர்களுக்கு தண்டனையை புதிய மசோதா மூலம் ரூ.50,000 வரை அபராதம் விதித்து நிறைவேற்றியிருக்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான இந்த செயல் மீனவர்களை மேலும் கண்ணீரில் மிதக்க வைத்திருக்கிறது. இலங்கையின் சதி வலையை அறுத்தெறிந்து தீர்வு காண்பதுதான் சரியான செயல் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்