SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புண்ணிய ஆத்மாக்கள்

2016-02-19@ 02:52:29

தேர்தல் நாளன்று ஒரு நாள் விடுமுறை கிடைப்பது என்பது, வேலைக்கு செல்பவர்களுக்கு பள்ளிக்காலத்தில் கிடைக்கும் திடீர் மழைக்கால விடுமுறைக்கு சமம்.  அவ்வளவு குஷி பிறக்கும். அதுவும் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த விடுப்பு, ஒருபடி மேல்தான். குக்கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்வாலிபர்,  உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோடுவதற்காக சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் பணிக்கு செல்வதற்காக ஊருக்கு திரும்பி உள்ளார். சில லாரி  ஓட்டுநர்களுக்கு முன்னேறி வருபவர்களை பார்த்தாலே பிடிக்காது. அது என்ன காரணம் என்பது, இதுவரை கண்டறியப்படாத ஒரு மர்மம். பஸ்சை ஓவர் டேக் செய்து  முன்னேறி வந்து கொண்டிருந்த அந்த வாலிபரை, எதிர்ப்புறம் வந்த லாரி சற்றும் ஈவு, இரக்கும் இல்லாமல் இடித்து தள்ளியது.

விபத்தில் பைக்கில் வந்த வாலிபரின் உடலை 2 துண்டாக பிரித்த பின்னர்தான் லாரி டயர் அடங்குகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்தை  பார்த்தவர்கள், அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்தார்கள். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிட, உடல் துண்டாகி கிடந்த வாலிபர், சிலரை பார்த்து அருகில்  அழைக்கிறார். ஆனால், கோரமாக இருந்த அவரது நிலையை கண்டு, யாருமே பக்கத்தில் செல்ல பயப்படுகிறார்கள். யாரோ ஒரு புண்ணியவான் மட்டும் உடனடியாக  ஆம்புலன்சுக்கு போன் செய்து சொல்ல. விபத்து நடந்த 15வது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து சேர்கிறது.ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள்  வாலிபரை தூக்கிச் செல்வதற்காக அருகில் வந்தபோது, மற்றவர்களை அழைத்ததுபோல, அவர்களை தன் அருகில் வருமாறு அழைக்கிறார். ஒரு ஊழியர் அருகில்  சென்றபோது, ‘‘சார் விபத்தில் என் உடல் ரெண்டு துண்டாகிவிட்டது.

இனி நான் பிழைக்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். தயவுசெஞ்சு நன்றாக இருக்கும் என் கண்களை யாருக்காவது தானமாக கொடுத்துவிடச்  சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்’’ என்று கூறிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் உயிரை விடுகிறார். பெங்களூர் அருகே  திப்பேகொண்டனஹள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில், இறந்த அந்த வாலிபர் ஹரீஷின் தீர்க்கமான முடிவால் இன்று 2 பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது.  இன்னமும் பூமியில் மழை பெய்ய இதுபோன்ற புண்ணிய ஆத்மாக்கள்தான் காரணம்.

prescription coupon card prescription coupon viagra online coupon
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்