SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட்டிக்கு ஆப்பு

2016-02-18@ 00:28:50

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை திடீரென குறைத்துள்ளது மத்திய அரசு. தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி  வருவதால், தங்களுக்கு போதுமான முதலீடு குவிவதில்லை என்று வங்கிகள் புகார் செய்ய, இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் முதியோருக்கு பக்கபலமாக இருப்பது சிறுசேமிப்பு  திட்டங்கள்தான். ஓய்வூதியம் பெறாத, அல்லது குறைவான ஓய்வூதியம் பெறும் முதியோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை சிறுசேமிப்பு திட்டங்களில்  முதலீடு செய்து அதில் கிடைக்கும் வட்டியை நம்பி வாழ்கின்றனர். அரசின் வட்டிக் குறைப்பு அறிவிப்பு இவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.  இனிமேல் சந்தை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் 3 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் என்றும்  அரசு அறிவித்துள்ளது.

வட்டி வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் முதியோர், அரசின் இந்த முடிவால் திகைத்துபோய் உள்ளனர். முதியோருக்கான சிறப்பு முதலீட்டு  திட்டத்துக்கு வட்டி குறைக்கப்படவில்லை என்றாலும், 5 ஆண்டுக்கு முன் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பல முதியோர் அந்த திட்டத்தில்  முதலீடு செய்வதில்லை. அரசின் முடிவால் வட்டி வருவாயை நம்பி இருக்கும் முதியோர்  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில்  முதலீடு செய்யும் நிலை வரும். பின்னர், வட்டியும் போய், அசலும் கிடைக்காமல் ஏமாறுவார்கள். இதைத்தான் இந்த அரசு விரும்புகிறது போலும். பல நாடுகளில் வட்டி விகிதம் பூஜ்யம் அல்லது ஒன்றிரண்டு  சதவீதத்துக்குள்ளாகவே இருப்பதால் நாமும் குறைந்த வட்டி தரும் நாடாக மாறினால்  நாடு முன்னேறும் என்று வழக்கம்போல் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துவிட்டனர்.

இந்த வட்டி குறைப்பு பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளை போல சமூக பாதுகாப்பு திட்டங்கள் இந்தியாவில்  கிடையாது. பல நாடுகளில் வேலை போய்விட்டால் அரசு உதவித் தொகை தரும், கல்வி இலவசம், முதியோருக்கு அவர்கள் கவுரவமான வாழ்க்கை  வாழ தேவையான ஓய்வூதியம், இலவச மருத்துவ வசதி என்று பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் உண்டு. இங்கு பெயரளவுக்கு சமூக பாதுகாப்பு  திட்டங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்ததுபோல ஆயிரக்கணக்கான முதியோரின் சொற்ப ஓய்வூதியத்தையும் திடீரென நிறுத்தி அவர்களை  தற்கொலைக்கு தள்ளும் அரசாங்கங்கள் உள்ள நாடு இந்தியா. சாதாரண மக்களை வதைக்கும் இந்த வட்டிக்கு ஆப்பு வைக்கும் முடிவால் அரசுக்கு  ஓராண்டு கிடைக்கும் லாபம் வெறும் ₹4,500 கோடிதான். இது மத்திய அரசுக்கு பெரிய தொகை அல்ல. எனவே வட்டி குறைப்பு முடிவை  மறுபரிசீலனை செய்தால் மட்டுமே மக்கள் நல அரசாங்கம் நடத்துகிறோம் என்பதை மக்களுக்கு மத்திய அரசால் உணர்த்த முடியும்.

abilify and coke web-dev.dk abilify and coke
cialis cvs coupon cialis coupon cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்