SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலையில் விழுந்த கடன்

2016-02-17@ 00:49:47

வாக்குறுதிகளை அள்ளி வீசி 2011ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த அதிமுக அரசின் 5 ஆண்டு பதவி காலத்தின் இறுதி நாட்கள் நகர்ந்து  கொண்டிருக்கிறது.  பட்ஜெட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரே சாதனை ஆண்டு தோறும் கடன் சுமையை உயர்த்தியது தான். இடைக்கால பட்ஜெட்டில்  பற்றாக்குறை ரூ. 36,740 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் சுமை ரூ. 2லட்சத்து 47 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது. இதுவரை வேறு எந்த அரசும் நிகழ்த்தாத சாதனை. தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இவ்வளவு கடன் சுமை வேறு  எந்த காலத்திலும் இல்லை. நடப்பு நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட்டை கடந்தாண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்தபோது கடன் சுமை ரூ. 2லட்சம்  கோடியாக இருந்தது. அப்போது ஐந்தாண்டு ஆட்சி கால முடிவில் கடன் சுமையை வெகுவாக குறைத்து விடுவோம் என்று பன்னீர்செல்வம்  வாக்குறுதியளித்தார். ஆனால் சுமையை மேலும் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு ஏற்றியிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.

முந்தைய திமுக ஆட்சியில் இருந்த நிலவரத்தை ஒப்பிடுகையில் தற்போது 234.98 சதவீதம் கடன் சுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தின்  கடைசி ஆண்டில் கடன் மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்த ஒரு  ரிப்போர்ட் கார்டையும் சமர்ப்பித்தார். அதில் 8600 கோயில்களுக்கு கும்பாபிஷேகம், 28 லட்சம் பேருக்கு ஆட்டு குட்டி வழங்கியது போன்றவை இந்த  ஆட்சியின் சாதனையாக பட்டியலிட்டபோது ஆளும்கட்சி வரிசையில் மேஜை தட்டல் அடங்கவே பல நிமிடங்களானது.  மின் வாரியத்தின் கடன்  சுமை மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் சேர்த்தால் மொத்த கடன் ரூ.4 லட்சம் கோடியை தாண்டும். அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது மற்றும் பாலம், மின்சாரம் போன்ற திட்டங்களை  நிறைவேற்றுவதுதான் அரசின் கடமை.  ஆனால், அரசு தந்த பரிசு ஒவ்வொருவர் தலையிலும் 32 ஆயிரத்து 937 ரூபாய் கடன் தான். மக்களை  கடனாளியாக்கும் ஒரு அரசு நீடித்தால் என்ன பயன் என்பதை ஆழமாக சிந்திக்கவேண்டிய நேரமிது.

sinemet megaedd.com sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்