SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் இயக்கமாக...

2016-02-16@ 00:42:23

அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்தைக் கடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகியுள்ளது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மனித சங்கிலி போராட்டம் உள்பட பல்வேறு நூதன போராட்டங்களும் அப் பகுதியில் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதோடு, அறிக்கைகள் மூலம் நேசக்கரம் நீட்டியுள்ளனர். உண்ணாவிரதம் இருப்பவர்கள் சோர்ந்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.  இது சமீபத்திய பரபரப்பு செய்தி. ஆனால், பிரச்னையோ 60 ஆண்டுகள் பழைமையானது.

காவிரியின் துணை நதியான பவானியில், மழை காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பெரும் அளவு தண்ணீர் வீணாக ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேமித்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை நீர் ஆதாரத்தைப் பெருக்க அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த காவிரி தொழில்நுட்ப குழு, திட்டத்தை அமல்படுத்தலாம். திட்டத்தை அமல்படுத்த ரூ.1,862 கோடி செலவாகும் என்று கடந்த 2011-12ல் மதிப்பீடு அறிக்கை தயார் செய்தது. திறந்த கால்வாய் மூலம் மூன்று மாவட்டங்களில் சுமார் 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 71 குளங்கள், 538 குட்டைகளை நிரப்பலாம். இதனால், சுமார் 50 லட்சம் மக்களுக்கு குடிநீரும், 5 லட்சம் கால்நடைகளும் பயன்பெறுவதோடு, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்.

இந்த தலைசிறந்த திட்டத்தைப் பற்றி அப்பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் நினைவு கூர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தங்களை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் என்ற அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல உள்ளங்களின் எதிர்பார்ப்பு. 60 ஆண்டுகளாக இந்த திட்டத்தைப் பற்றிய பேச்சும் கோரிக்கைகளும் ஒலிக்கின்றன. ஆனால், செயல்வடிவம் பெறவில்லை. இதற்கு காரணம் நிதிதான். தற்போதைய நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் சுமார் ₹3 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு அரசிடம் நிதியில்லை என்ற பதில் சொல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரசின் நிலை அறிந்த அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட கூட்டமைப்பு, நிபுணர் குழு மூலம் ரூ.950 கோடி மதிப்பீட்டில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் மாற்றுத் திட்டத்தை தயாரித்துள்ளது. நல்ல திட்டம், தொலைநோக்கு சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம். ஆனால், நிதி இல்லை என்ற ஒரே காரணத்தால் செயல்படுத்தாமல் போனது துரதிருஷ்டவசமானது என்றே சொல்லலாம். வீண் செலவுகளை (இலவச திட்டங்களைக் குறைத்து) இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால வரையறையுடன் திட்டத்தை முடித்திருக்கலாம். சரி, கடந்த கால நிகழ்வுகளை விட்டுவிட்டு இனிமேலாவது இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திட்டம் நிறைவேற வேண்டும் என்றால், இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மக்கள் பங்களிப்புடன் நடக்கும் எந்த திட்டமும் நிறைவேறாமல் போனதாக வரலாறு இல்லை. 

coupons for cialis printable read free discount prescription cards
drug coupon card prescription coupons drug discount coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்