SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகிக்கும் தங்கம்

2016-02-15@ 00:19:08

உலகிலேயே தங்க நகைகள் வாங்குவதில் இந்தியர்களுக்குதான் முதலிடம். அந்த அளவுக்கு இங்கு உள்ளவர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மிக அதிகம். சாதாரண விசேஷமாக இருந்தாலும் குண்டுமணி தங்கமாவது இருந்தால்தான் மதிப்பு என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறி உணர்வோடு கலந்த விஷயம். காரணம், இது முதலீட்டுக்கான உலோகமாக இல்லாமல் மங்களகரமானது என்ற சென்டிமென்டும் கலந்திருக்கிறது. இதனால்தான் விலை உயர்ந்தாலும் தங்கம் விற்பனை சரிவதில்லை. ஆனாலும் மகளின் திருமணம், குழந்தை காதுகுத்து என நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது.

பொதுவாகவே கச்சா எண்ணெய், தங்கம், பெட்ரோல் விலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தங்கத்தை பொறுத்தவரை உலக அளவில் லண்டனில் உள்ள குழுதான் தினசரி காலையும் மாலையும் நிர்ணயிக்கிறது. யூரோ, டாலர், பவுண்டு விலைக்கும் தங்கம் விலைக்கும் கூட சம்பந்தம் உண்டு. இருந்தாலும், இப்போதைய கச்சா எண்ணெய் நிலவரத்தை ஒப்பிட்டால் தங்கம் விலை குறையத்தான் வேண்டும். ஆனாலும், கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உற்பத்தி குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை உயரும் என்பது பொது விதி. உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் எதில் முதலீடு செய்கிறார்களோ அது கச்சா எண்ணெய், டாலர், தங்கம் எதுவாக இருந்தாலும் அதன் மதிப்பு அதிகரிக்கும்.

அதெல்லாம் சரி, உலக சந்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வது ஒருபுறம் இருந்தாலும், முழுக்க முழுக்க இறக்குமதியை சார்ந்தே இல்லை. கடத்தல் தங்கத்துக்கும் பஞ்சமில்லை. இதனால் உலக விலை நிர்ணயம்தான் இங்கு விலையேற்றத்துக்கு காரணம் என்று பொதுப்படையாக கூறிவிட முடியாது. இங்குள்ள தேவையும் ஒரு காரணம். கடந்த ஒரு மாதத்தில் உலக விலையை நிர்ணயிக்கும் லண்டன் சந்தையில் தங்கம் விலை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் சரிந்தாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒரு பக்கம். இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் பங்குச்சந்தை படு வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பல கோடி பணம் பறிபோய் விட்டது. இதனால் எல்லாரும் தங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர்.

ஏற்கெனவே தங்க மோகம் அதிகமுள்ள இந்தியாவில் இதுபற்றி கேட்கவே வேண்டாம்.  இதனால் 2000ம் ஆண்டுக்கு முன்பு 4 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த ஒரு சவரன் தங்கம், 2010க்கு பிறகு கிடுவென உயர்ந்து 25 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது மீண்டும் குறைந்தாலும் மலைக்க வைக்கும் அளவுக்கு உயர தொடங்கியுள்ளது. இது அப்பாவி நடுத்தர மக்களுக்கு புளியை கரைக்கும் விஷயம்தான். எனவே தங்க நகை வாங்கி குவிப்பது நாட்டுக்கு ஆபத்து என்று அரசு கதறினாலும், இந்தியர்களின் தங்க மோகம் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலை எகிறிக்கொண்டிருக்கிறது.

prescription coupon card prescription coupon viagra online coupon
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்