SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலிகள் ஜாக்கிரதை

2016-02-13@ 03:09:33

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் 50 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற செய்தி, எல்லோரையும் உலுக்கி விட்டது.புதிய வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 20ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 2016, ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வெளியான  இந்த பட்டியலில் போலி வாக்காளர்கள் லட்சக்கணக்காேனார் இடம் பெற்றுள்ளனர்.போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் என பாகுபாடின்றி அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகார் மனு கொடுத்துள்ளன. வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

எப்பொழுதோ இறந்து போனவர்களும், இந்த புதிய பட்டியலில் வாக்காளர்களாக வாழ்கின்றனர்.  இந்த எண்ணிக்கை சென்னையில் மட்டும் ஒரு லட்சம். தவிர சென்னையில் 60 ஆயிரத்துக்கும்  அதிகமானோர், தாங்களாகவே முன்வந்து, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்  கோரியுள்ளனர். அதாவது, 2 இடங்களில் இவர்களது பெயர் உள்ளது. இந்த தகவல்களை  ஒப்புதல் வாக்குமூலமாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருப்பதுதான் வேதனை!அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால், போலி வாக்காளர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. தமிழகத்தில் போலி வாக்காளர்களை கண்டறிய வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை வீடு வீடாக சென்று, பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.

பல கட்டங்களாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, 100 சதவீத சரியான வாக்காளர் பட்டியல் என இடைவிடாமல் பிரசாரம் செய்தது தேர்தல் ஆணையம். அட்வான்ஸ் டெக்னாலஜிகளை பயன் படுத்தியும், வாக்காளர் பட்டியலில் நம்பகத்தன்மை இல்லை என்பது கவலையளிக்கும் செய்தி.எந்த தேர்தலிலும் இல்லாத  அளவுக்கு போலி வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது இந்த முறை தான். ஆரம்பத்தில் இருந்தே இது பற்றி பல முறை பல கட்சிகளும் கூக்குரல் இட்டும் எந்த பலனும் இல்லை. கோர்ட்டுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்று திமுக அறிவித்ததும் தேர்தல் கமிஷன் விழித்து கொண்டது. உடனே நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டியுள்ளது.

போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற வாக்குறுதியை ஆணையம் காப்பாற்றும் என்று நம்பலாமா?தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில், ஒரே கட்டமாக தேர்தல்  நடத்த வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் உள்ள அதிகாரிகளை  இடமாற்றம் செய்ய வேண்டும், தேர்தலுக்கு முன்னதாக 144 தடையுத்தரவு போடக்  கூடாது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் மூலம்  பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும், தேர்தல் உண்மையாக நடப்பதை  உறுதி செய்ய கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், வாக்குப்பதிவு நாளை  கருத்தில் கொண்டு, குறைந்தது 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். ஜனநாயக ஆட்சிமுறை உள்ள நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. தேர்தல்களை முறையாக நடத்துவதன் மூலமே அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.தே ர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் 50 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற செய்தி, எல்லோரையும் உலுக்கி விட்டது.புதிய வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 20ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 2016, ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வெளியான  இந்த பட்டியலில் போலி வாக்காளர்கள் லட்சக்கணக்காேனார் இடம் பெற்றுள்ளனர்.

போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் என பாகுபாடின்றி அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகார் மனு கொடுத்துள்ளன. வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.எப்பொழுதோ இறந்து போனவர்களும், இந்த புதிய பட்டியலில் வாக்காளர்களாக வாழ்கின்றனர்.  இந்த எண்ணிக்கை சென்னையில் மட்டும் ஒரு லட்சம். தவிர சென்னையில் 60 ஆயிரத்துக்கும்  அதிகமானோர், தாங்களாகவே முன்வந்து, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்  கோரியுள்ளனர். அதாவது, 2 இடங்களில் இவர்களது பெயர் உள்ளது. இந்த தகவல்களை  ஒப்புதல் வாக்குமூலமாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருப்பதுதான் வேதனை!அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால், போலி வாக்காளர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

தமிழகத்தில் போலி வாக்காளர்களை கண்டறிய வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை வீடு வீடாக சென்று, பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார். பல கட்டங்களாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, 100 சதவீத சரியான வாக்காளர் பட்டியல் என இடைவிடாமல் பிரசாரம் செய்தது தேர்தல் ஆணையம். அட்வான்ஸ் டெக்னாலஜிகளை பயன் படுத்தியும், வாக்காளர் பட்டியலில் நம்பகத்தன்மை இல்லை என்பது கவலையளிக்கும் செய்தி.

எந்த தேர்தலிலும் இல்லாத  அளவுக்கு போலி வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது இந்த முறை தான். ஆரம்பத்தில் இருந்தே இது பற்றி பல முறை பல கட்சிகளும் கூக்குரல் இட்டும் எந்த பலனும் இல்லை. கோர்ட்டுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்று திமுக அறிவித்ததும் தேர்தல் கமிஷன் விழித்து கொண்டது. உடனே நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டியுள்ளது.

 போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற வாக்குறுதியை ஆணையம் காப்பாற்றும் என்று நம்பலாமா?தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில், ஒரே கட்டமாக தேர்தல்  நடத்த வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் உள்ள அதிகாரிகளை  இடமாற்றம் செய்ய வேண்டும், தேர்தலுக்கு முன்னதாக 144 தடையுத்தரவு போடக்  கூடாது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் மூலம்  பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும், தேர்தல் உண்மையாக நடப்பதை  உறுதி செய்ய கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், வாக்குப்பதிவு நாளை  கருத்தில் கொண்டு, குறைந்தது 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். ஜனநாயக ஆட்சிமுறை உள்ள நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. தேர்தல்களை முறையாக நடத்துவதன் மூலமே அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

prescription coupon card prescription coupon viagra online coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்