SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பட்டதாரி பெண்

2016-02-13@ 01:22:57

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பட்டதாரி பெண் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் அனிதா (26), பிசிஏ படித்துள்ளார். கணவரை பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ள அவருக்கு, ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளான். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக 4 வாலிபர்களிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் வசூல் செய்துள்ளார். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. மாறாக, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த பாதிக்கப்பட்ட வாலிபர்கள் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், அனிதா மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல்  சிறையில் அடைத்தனர். கைது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: அனிதா திருமணம் ஆகாதவர் போலவே தன்னை காட்டிக் கொண்டுள்ளார். அவரின் அழகிலும், பேச்சிலும் பல இளைஞர்கள் மயங்கியுள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட அனிதா ‘ஜொல்லு’விடும் வாலிபர்களிடம் நைசாக பேசி உள்ளார். அதன்மூலம் தன் நட்பு வலைக்குள் கொண்டு வந்து தினமும் மணிக்கணக்கில் பேசியுள்ளார். அப்போது, தன்னிடம் மெய் மறந்து பேசும் வாலிபர்களிடம் உங்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருகிறேன், என உறுதி அளித்துள்ளார். அவரது வசீகர பேச்சில் மயங்கிய இளைஞர்கள் அவர் கூறுவது உண்மை என நம்பி உள்ளனர்.

மேலும், அவர் தனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். நான் நினைத்தால் அடுத்த வினாடியே வேலை வாங்கி கொடுக்க முடியும். ஆனால், அதற்கு ₹4 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞர்கள், மறுப்பு தெரிவிக்காமல் அனிதா கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்த பணத்தில் பெரும்பாக்கத்தில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்ட இளைஞர்களிடம் தனக்கு திருமணமாகவில்லை. தாலி கட்டி சேர்ந்து வாழ்வோம் என கூறி, அதற்கு சாட்சியாக செயின் ஒன்றை கொடுத்து  எனது கழுத்தில் கட்டுங்கள் என்று கூறியுள்ளார். இவரின் இனிமையான ஈர்ப்பு குரலை உண்மை என்று நம்பும் வாலிபர்கள் சிலர் அவர் கூறுவதுபோல் செயினை கழுத்தில் கட்டி குடும்பம் நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து சேர்ந்து வாழும் வாலிபரின் நண்பர்களிடம் அறிமுகமாகும் அனிதா, அவர்களிடமும் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளார். அவர்களுக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண வசூலில் ஈடுபட்டுள்ளார். இப்படி அனிதாவின் கைவரிசை தொடர்ந்து நடந்துள்ளது. இவ்வாறு பலரிடம் கைவரிசை காட்டியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதுவரை 4 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இன்னும் பலர் புகார் அளிக்க வர உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. நாங்கள் அவரை முதல் கட்டமாக விசாரணைக்காக அழைத்தபோது சொகுசு காரில் வந்து இறங்கினார்.

இதனால், எங்களுக்கு இவர் மோசடி செய்திருப்பாரா? என்ற சந்தேகம் வலுத்தது. இருப்பினும் அவரிடம் விசாரணையில் இறங்கினோம். எங்களிடம் அவர் தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் வைத்திருப்பதாகவும், தான் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் சர்வ சாதாரணமாக கூறினார். அவரின் பேச்சில் உண்மை இல்லை என்று தெரிந்து கொண்ட நாங்கள் தொடர்ந்து எங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்தபோது கடும் மோதலில் ஈடுபட்டார். பின்னர், நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

இதுவரை எத்தனை பேரிடம் அனிதா கைவரிசை காட்டியுள்ளார்? எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பதை முழுமையாக விசாரிக்க அவரை விரைவில் போலீஸ் காவலில் எடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.

coupons for cialis printable site free discount prescription cards
rite aid load to card coupons link rite aid store products
drug coupon card prescription coupons drug discount coupons
cialis cvs coupon cialis coupon cialis 20mg
abortion pill procedures late term abortion pill having an abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்