SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைவில் வாழ்வார்

2016-02-12@ 03:10:17

சியாச்சின் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற வெறியே, உலக அதிசயமாக மைனஸ் 40 டிகிரி குளிரிலும் அவரால் உயிர் வாழ முடிந்துள்ளது.ஹனுமந்தப்பா என்ற அந்த இளைஞருக்கு அவ்வளவு எளிதில் ராணுவத்தில் வேலை கிடைத்துவிடவில்லை. டீன் ஏஜ்ஜில் மூன்று முயற்சிகள் தோல்வி அடைந்த பின்னர், தனது 20வது வயதில், நான்காவது முயற்சியில் அவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். தேசத்துக்காக அவர் பணியாற்றியது, மொத்தம் 13 ஆண்டுகள். ஆனால், இதில் 10 ஆண்டுகள் மிகச்சவாலான பகுதியில் பணியாற்றியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தேடுதல் வேட்டை பணி என்பது மிகச்சவாலானது. எந்த நேரத்திலும் உயிர்போகும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால், தேசத்தின் மீது பற்று கொண்டிருந்த ஹனுமந்தப்பா ஒருமுறை பணியாற்றி, பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும், மீண்டும் இரண்டாவது முறையாக அவரே அப்பணியை விரும்பி கேட்டு சென்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் தார்வார் மாவட்டத்தில் ஒரு குக்கிராமமான பெடாதூரைச் சேர்ந்த ஹனுமந்தப்பாவின் குடும்பம் மிக ஏழ்மையானது. உயிருக்கு ஆபத்தான நிலையில், பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு, டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டபோது, டெல்லிக்கு செல்லக்கூட பணமில்லாத அளவுக்கு கஷ்டப்பட்ட அவரின் குடும்பம், தேசப்பற்றில் உலக கோடீஸ்வரர்கள் என்றால் அது மிகையில்லை.சாகக்கிடந்த கணவரைப்பற்றி அவரது மனைவியிடம் கேட்டபோது, ‘‘இறைவனிடம் என்னுடைய ஒரே கோரிக்கை. அடுத்து ஒரு உயிரை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், தயவு செய்து என் உயிரை எடுத்து கொள். என் கணவரின் உயிரை விட்டுவிடு. அவர் நாட்டுக்காக சேவையாற்றுவதில் மிக பற்றுக் கொண்டவர்’’ என்று அந்த இளம்பெண் கூறினார். இது மனதில் இருந்து வந்த முத்தான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள்.

கடந்த 4 நாட்களாக ஹனுமந்தப்பா என்ற வார்த்தைதான், இந்திய மக்களால் அதிகம் முணுமுணுக்கப்பட்ட, தேடப்பட்ட வார்த்தை என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலால் அவர் மறைந்தாலும், தன் தேச பக்தியாலும், வீரத்தாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஹனுமந்தப்பா.

cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

 • nortkorean_adhibar1

  வடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்

 • 25-04-2019

  25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்