SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

81 அடி சிவன் சிலை திறப்பு : தமிழகத்தில் முதல் முறையாக நக்கீரருக்கும் சிலை

2016-01-20@ 21:24:51

ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் பஸ் நிலையம் அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ற நாதர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. இக்கோயிலில் திருப்பணிகள் பழமை மாறாமல் நடந்துவருகிறது. கோயில் முன்புறம் குளம் இருந்ததாக அறியப்பட்ட இடத்தில் புதிதாக குளம் வெட்டப்பட்டு அதன் நடுப்பகுதியில் தமிழகத்திலே முதன்முறையாக 81 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சிவபெருமான் முழுஉருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலில் சிவபெருமானை நோக்கியபடி சுமார் முக்கால் அடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கு முழு உருவ கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. சிவன் மற்றும் நக்கீரர் சிலைகளை எம்எல்ஏ குப.கிருஷ்ணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

எம்எல்ஏ குப.கிருஷ்ணன் கூறுகையில், ‘பாண்டிய நாட்டில் மதுரையில் வாழ்ந்த நக்கீரர் முருகனின் அறுபடை வீடுகள் குறித்து திருமுருகாற்றுப்படை நூலை எழுதியவர். நக்கீரரின் புலமையை அறியச் செய்யவும் தமிழின் பெருமையை உலகிற்கு அறியச் செய்யவும் சிவபெருமான் நக்கீரரைச் சோதிக்கும் வண்ணம் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பெருமைகள் சொல்கின்றன. நக்கீரர், பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என சிவபெருமானுடன் வாதிட்டதுடன், இதுதொடர்பாக அவருக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தை கீரமங்கலம் மெய் நின்ற நாதர் முன் நின்று தீர்த்துக்கொண்டுள்ளார். அதனால்தான் மொழிக்கும் கலைக்கும் கலாசாரத்திற்கும் பெருமை சேர்த்த சிவபெருமானை இங்கு நிலைக்கச் செய்ய இதுபோல் ஒரு உருவச்சிலையை அமைத்தோம். இதுபோல் ஆசியாவிலேயே வேறொரு சிலை இதுவரை நிறுவப்பட்டதாக அறியவில்லை.

மேலும் தமிழுக்கும் நேர்மைக்கும் பெருமை சேர்த்த நக்கீரருக்கும் வேறு இடங்களில் சிலை ஏதுமில்லை. அதனால் கீரமங்கலத்தில் அமைப்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும் என்று கருதி ஏழே முக்கால் அடி உயரத்தில் அவருக்கும் ஒருசிலை அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு சிலைகளும் ஆன்மீகம் தாண்டி மொழி காக்கவும் கலாச்சாரத்திற்காகவும் இன்று திறப்பு விழா செய்யப்பட்டது’ என்றார்.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்