SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீப் பாடல் விவகாரம் : நடிகர் சிம்புவை கைது செய்ய தனிப்படை தீவிரம்

2015-12-23@ 14:50:35

சென்னை:  பெண்களை இழிவு படுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும், இசையமைத்து இருப்பதாக கூறப்படும் அனிருத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் வலுத்து வருகிறது. கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை உறுதி என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது, இரண்டாவது கடிதத்தை எழுதி உள்ளனர். அதில், பீப் பாடலை பதிவிறக்கம் செய்தவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்கையில், சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெண் வக்கீல்களும் சிம்புவுக்கு எதிராக வாதாடினர். நீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து சிம்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு ஏற்றாற்போல் சைபர் கிரைம் போலீசார் சிம்புவை கைது செய்ய தற்போது தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் சிம்புவின் நடமாட்டத்தை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எனவே, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சிம்பு பதுங்க அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
coupons for cialis printable read free discount prescription cards
drug coupon card prescription coupons drug discount coupons
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்