SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜனவரி 11ல் அரையாண்டு தேர்வு: ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு

2015-12-19@ 00:13:46

சென்னை: தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் ஜனவரி  11ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு பெரும் பாதிப்புக்குள்ளாகின. அதனால் கடந்த மாதம் 7ம் தேதி முதல் இந்த மாதம் 12ம் தேதி வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இடையில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் திறந்தன. இதனால், மொத்தம் 34 நாட்கள் விடுமுறை விடப்பட்டன.

 தொடர் மழைக்கு பல லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு பொருட்கள், உடைமைகள், பாடப்புத்தகங்களை இழந்தனர். இதனால் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்ததால் அவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது மழை விட்டு, பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் பலருக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்த துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  வழக்கமாக அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கி, 24ம் தேதிக்குள் முடிவையும். அதன்பின் கிறிஸ்துமஸ் பண்டிகையான 25ம் தேதியையொட்டி தொடர்ந்து அரையாண்டு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையால், அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மூர்த்தி, ‘டிசம்பர் மாதம் நடந்த இருந்த அரையாண்டு தேர்வை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளோம். அதற்கு முன்பு அரையாண்டு தேர்வு நடத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம். மாணவர்கள் அச்சப்படதேவையில்லை. புத்தகம் இல்லாத மாணவர்களுக்கு அரசு புத்தகங்களை வழங்கி வருகிறது. ஜனவரி மாதம் அரையாண்டு தேர்வை நடத்துவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசு தேர்வு அட்டவணையை நேற்று மாலை வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு: பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகள் வழக்கம்  போல காலை 10 மணிக்கு தொடங்கும். மதியம் 12.45க்கு தேர்வு முடியும்.  கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பு தாளில் விவரங்கள்  குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் ஜனவரி 11ம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. அதில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 2வது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகிறது.இதன் மூலம் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. மேலும், முழு ஆண்டுத் தேர்வு வழக்கம்போல, மார்ச் மாதம் தொடங்கி நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

coupons for cialis printable read free discount prescription cards
plavix tonydyson.co.uk plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-09-2019

  இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்