SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுகவினர் மறியல் 16 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கைத

2012-07-05@ 00:42:37

சென்னை : அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. சென்னையில் 16 இடங்களில் மறியல் செய்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

* ஆயிரம் விளக்கு பகுதி திமுகவினர் டிஎம்எஸ் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை அறிவாலயம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அந்த வழியாக திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்துக்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பகுதி செயலாளர் மா.பா. அன்புதுரை தலைமையில், தலைமை நிலைய செயலாளர் சதாசிவம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வி.எஸ்.ராஜ் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
* தி.நகர் பகுதி திமுக சார்பில் கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த பகுதி செயலாளர் கே.ஏழுமலை மற்றும் செயற்குழு உறுப்பினர் மு.க.செல்வம் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
* கே.கே.நகர் பகுதி திமுக சார்பில் கிண்டி மாம்பலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த விருகம்பாக்கம் பகுதி செயலாளர் தனசேகரன் மற்றும் கவிஞர் காசி முத்துமாணிக்கம் உட்பட ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
* மயிலை திமுக சார்பில் மயிலை,திருவல்லிக்கேணி வட்டாட்சியர் அலுவலகம் அருகே  பகுதி செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் 500 பேர் கைதாயினர்.
* வேளச்சேரி பகுதி திமுக சார்பில் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் பகுதி செயலா ளர் மு.ரவி தலைமையில் 10 பெண்கள் உட்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
* சோழிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் பங்கேற்ற கவுன்சிலர் அரவிந்த் ரமேஷ், பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஏகாம்பரம் உட்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
* பெரம்பூர் பகுதி திமுக சார்பில் வியாசர்பாடி குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் பகுதி செயலாளர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் பங்கேற்ற மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் கவுன்சிலர் நெடுமாறன் உட்பட 500 பேர் கைதானார்கள்.
* அண்ணா நகர் பகுதி திமுக சார்பில் அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடந்த போராட்டத்தில் பகுதி செயலாளர் ராமலிங்கம் தலைமையில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஆர்.கே.நகர் பகுதி திமுக சார்பில் தண்டையார்பேட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த மறியலில் பகுதி செயலாளர் டன்லப் ரவி, முன்னாள் எம்எல்ஏ சேகர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி நாராயணசாமி உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ராயபுரம் பகுதி திமுக சார்பில் பேசின்பாலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இதில் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி தலைமையில், துணைப் பொது செயலாளர் சற்குணபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், இளைய அருணா, பாண்டிச் செல்வம் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
* திரு.வி.க.நகர் பகுதி திமுக சார்பில் புரசைவாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம், கவுன்சிலர் புஷ்பராஜ் உட்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
* துறைமுகம் பகுதி திமுக சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், பகுதி செயலாளர் மணிவேலன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வக்கீல் போஸ் உட்பட 500 பேர் கைதாயினர்.
* வில்லிவாக்கம் பகுதி திமுக சார்பில் அயன்புரம் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் பகுதி செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
* தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் 54 பெண்கள் உட்பட 504 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஆலந்தூர் பகுதி திமுக சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் 800 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று பல்லாவரம் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் எம்எல்ஏ வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் வந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் மாலை யில் விடுதலை செய்யப் பட்டனர்.

sms spy app phone monitoring software spy apps free
coupons for cialis printable read free discount prescription cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்