SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 கோயில்களில் கும்பாபிஷேகம் கும்பகோணம் விழா கோலம்

2015-11-29@ 18:15:31

கும்பகோணம்: கும்பகோணத்தில் மகாமக திருவிழாவையொட்டி சோடசலிங்கங்கள், நாகேஸ்வரர் உள்பட 6 கோயில்களின் மகாகும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மகாமக திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு அங்குள்ள கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி ரூ.1 கோடியே 80 லட்சத்து 73 ஆயிரத்தில் திருப்பணி செய்யப்பட்ட நாகேஸ்வரசுவாமி, 16 சோடசலிங்கங்கள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள் கோயில், இலுப்பையடி விநாயகர் கோயில், ஜலசந்திரமாரியம்மன் கோயில், பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ண சுவாமி கோயில் ஆகிய 6 கோயில்களின் மகாகும்பாபிஷேகம் இன்று நடந்தது.

நாகேஸ்வரர் கோயில்: நாகேஸ்வரர் கோயில் பகவான், நாகராஜரை பூஜித்து அனுகிரகம் பெற்ற கோயில். இக்கோயிலில் சிவகாம சுந்தரி, நடராஜ மூர்த்தி, பிரளய கால ருத்ரர், சூரிய பகவான், கங்கை கொண்ட விநாயகர், ஓம் காளி, சப்த மாதாக்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. 25ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கியது. 26 முதல் 28ம் தேதி வரை 5 கால யாக சாலை பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து நாகேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

சோடசலிங்கங்கள்: மகாமகம் குளத்தில் புண்ணிய நதிகளாகப் போற்றப்படும் காவிரி முதல் கங்கை நதி வரை உள்ள அனைத்து நதிகளுக்குரிய தேவதைகள் (கன்னிகைகள்) நீராடி பாபவிமோசனம் பெற்றதாகவும், அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனியாக ஒன்பது தீர்த்தக்கிணறுகளை உருவாக்கியதாகவும் வரலாறு கூறுகிறது. மகாமககுளத்தின் நான்கு கரைகளை சுற்றிலும் 16 வகை தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) அமைந்துள்ளன.

பிரம்மதீர்த்தேச்சுரர், முகுந்தேச்சுரர், தனேச்சுரர்,இடபேச்சுரர், பானேச்சுரர், கோணேச்சுரர், தினேச்சுரர், பைரவேச்சுரர், அகத்தீச்சுரர், வியாசேச்சுரர், உமாபாகேசுரர், நைரூதீஸ்வரர், பிரம்மோச்சுரர், கங்கேச்சுரர், முக்தேச்சுரர், சேத்திரபாலேசுரர் என மொத்தம் 16 வகை சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடசமகாலிங்க சுவாமிகள் என அழைப்பது வழக்கம். இவற்றுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் மற்ற 4 கோயில்களிலும் நடந்த கும்பாபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கும்பகோணமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

walgreens promo site free pharmacy discount cards
drug coupon card prostudiousa.com drug discount coupons
abilify and coke link abilify and coke
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்