SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழாக்களுக்கு தடை

2012-07-03@ 00:59:07

சென்னை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உள்ளது. இதை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு மாற்ற அதிமுக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து நூலகத்தை இடமாற்றம் செய்ய தடைவிதித்ததோடு, தற்போதைய நூலகத்தை எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த நூலக அரங்கில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நூலகப் பகுதிகள் திருமண மண்டபமாக காட்சி அளித்தது.

 திருமணத்திற்கு வந்தவர்களின் கார்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டிருந்தன. தடபுடலாக உணவுகள் பரிமாறப்பட்டது. உணவுகள், தட்டுகள் உட்பட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. நூலகத்திற்கு வந்தவர்கள் இதனால் அதிகமாக சிரமத்திற்கு உள்ளானார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, நூலகத்தை நடத்த போதிய பணம் இல்லை. இதனால் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே தான் நூலக அரங்கினை திருமணத்திற்கு வாடகைக்கு விடுகிறோம். அடுத்த மாதமும் ஒரு திருமணத்திற்கு பணம் பெறப்பட்டுள்ளது என்றனர்.

இதனால் நேற்று காலை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘நூலகத்தை எந்தவித மாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் திருமண விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் எஸ். வெங்கடேஷ் ஆஜராகி, ‘எதிர்காலத்தில் எந்த திருமண நிகழ்ச்சியும் நடத்த மாட்டோம்’ என்று கூறி சில கோப்புகளை தாக்கல் செய் தார். இந்த கோப்புகளை பரிசீலித்த நீதிபதிகள், ‘செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கிறோம்.

திருமணத்துக்கு பெற்ற பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும். நூலகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு தடை விதிக்கிறோம். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக தனியாக விளக்கமான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்Õ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கை விரைவாக எடுத்து இதில் இறுதி விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கில் பி.வில்சன் கோரிக்கை வைத்தார். இதை பரிசீலிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

* செப்.9ம் தேதி திருமணத்திற்கு தடை.
* பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது

cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்