SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு குறித்து பொய்யான தகவல்களை காங்கிரஸ் பரப்புகிறது: பாஜ குற்றச்சாட்டு

2015-11-15@ 17:13:17

புதுடெல்லி: மத்திய அரசு குறித்து பொய்யான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்புகிறது என பாஜ குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் பிரதமர்  நேருவின் பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்  சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சோனியா,  ராகுல் ஆகியோர் மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்து பாஜ செய்தி தொடர்பாளர் காந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியை குறிவைத்து நாடு முழுவதும் சிந்தனையாளர்கள்,  எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க மறைமுகமாக காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகமாகும். நேருவின்  பிறந்த தின நிகழ்ச்சியில் சகிப்பின்மை குறித்து மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜ அரசு குறித்து காங்கிரஸ் கட்சி பொய்யான  தகவல்களை பரப்பி வருகிறது.

இது போன்ற தகவல்களை பரப்புவதில் காங்கிரஸ் மிகவும் கில்லாடி. மோடி தலைமையிலான இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்து  வருவதை பிடிக்காத காங்கிரஸ் இது போன்ற பொய்களை பரப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது. நேரு 16, இந்திரா 15,  ராஜிவ் 10, சோனியா-மன்மோகன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே  ஆகியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மோடி அரசுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ்  பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்றார்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

  • china_pramdanm1

    சீனாவில் அடுத்த பிரமாண்டம் : 39,000 சதுர மீட்டர் பரப்பிலான உலகின் மிகப்பெரிய கோளரங்கம் உருவாக்கம்

  • 16-09-2019

    இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்