SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 ஆண்டில் 4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர்

2015-09-23@ 01:54:18

சேலம்:  சேலம் மாநகராட்சி 20வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரவீந்திரன்(55). இவரது மனைவி சுதா (45). சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை கொடுத்த புகார் மனு: எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரத்தில் வசித்து வருகின்றோம். எனது கணவர் ரவீந்திரன்(55). 20வது வார்டு கவுன்சிலராகவும், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார். அவர், கடந்த 2 ஆண்டில் இதுவரை 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார். பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார்.  தற்போது, சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவரை அம்மா உணவகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

இதுகுறித்து தட்டிக்கேட்டால், இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். அதற்கு உடன்பட்டு குடும்பம் நடத்துவதாக இருந்தால் இரு. இல்லாவிட்டால் விவாகரத்து பெற்றுக்கொள் என கூறி மிரட்டுகிறார். நான் கவுன்சிலர். எனக்கு மந்திரி, மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் வரை அனைவரையும் தெரியும். அவர்கள் எனக்கு உதவிக்கு வருவார்கள். உனக்கு யார் வருவார்கள்? பதவியில் இருக்கும் வரையில் என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என கூறி வருகிறார். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.  சுதா நிருபர்களிடம் கூறுகையில்; தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளேன். என் கணவர் போன்ற ஆட்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்றார்.

rite aid load to card coupons link rite aid store products
abortion pill procedures late term abortion pill having an abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்