SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

44 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின் பிரிந்த மனைவிக்கு மாதம் ரூ.21,000 ஜீவனாம்சம்

2015-09-15@ 10:48:22

புதுடெல்லி: பிரிந்து வாழும் மனைவிக்கு மாதம் ரூ.21,000 பராமரிப்புத் தொகை வழங்கவேண்டும் என ஓய்வுப்பெற்ற அரசு ஊழியருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 1971ம் ஆண்டு திருமணம் நடந்தது. மகன், மகள் உட்பட ஆறுபிள்ளைகள் உள்ளனர். கடந்த 44 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கொடுமைப்படுத்தி, சித்ரவதை செய்து தன்னைவிட்டு பிரிந்து சென்ற கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனைவி வழக்குதொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், ‘’தான் மனநிலை சரிஇல்லாதவள் என்றுக்கூறி தன்னை கணவர் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் நான் அவரைவிட்டு பிரிந்து தற்போது தனியாக வசித்து வருகிறேன். தான் மூத்த குடிமகள் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கைக்கு பணம் தேவைப்படுகிறது. நான் வேலைக்கு எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன். அதனால், கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும்’’ எனக் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோர்ட், “பிரிந்து வாழும் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.21,000 பராமரிப்புத்தொகையாக வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, கணவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “மனைவி, தற்போது எனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். தனியாக வசிக்கவில்லை. மகன் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கிறார். மேலும், மனைவியும் மாதம் ரூ. 20,000 சம்பாதிக்கிறார். அதனால், பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு, செசன்ஸ் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பிரவீன்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர், யாரையும் சார்ந்து இல்லை. தனியாக இருக்கிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓய்வுப்பெற்றதாகவும் அதன்மூலம் ரூ.22 லட்சம் பணம் வந்ததாகவும் விசாரணையில் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து மாதம் ரூ.15,000 வட்டி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகன் அதிகளவில் சம்பாதிக்கிறார் என்பதற்காக மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கு பணம்தர வேண்டிய அவசியம் இல்லை என்பதில்லை. பிரிந்து வாழ்ந்தாலும் கணவன் தான் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால், கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், கீழ் நீதிமன்றம் விதித்த ரூ.21,000 மாத பராமரிப்புத்தொகையை கணவர் வழங்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

plavix plavix 300 plavix plm
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்