SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி கிடக்கும் தொல்லியல் படிமங்கள்

2015-09-14@ 12:21:16

பெரம்பலூர்: பல்வேறு ஊர்களில் சேகரித்துள்ள தொல்லியல், புவியியல் படிமங்களை பாதுகாக்கும் வகையில் பெரம்பலூரில் பல்துறை அருங்காட்சியகத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.பழங்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் மையப்பகுதிவரை கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்குள்ள காரை கிராமத்திலிருந்து அரியலூர் மாவட்டம் வரை கடலாக இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்ததாக கருதப்படும் இந்த காரை கிராமத்தருகே கடலின் ஆழத்தில் காணப்படும் மண்மேடுகள் இன்றும் காணப்படுகிறது. இந்த மண்மேடுகள் சுண்ணாம்பு மண்ணால் ஆனவையாகும். இப்பகுதியில் தண்ணீரில் வாழும் தாவரங்களைத் தவிர வேறெந்த தாவரங்களும் அதிக அளவில் வளராமல் இருப்பதும், செம்மஞ்சள் நிறத்தில் பலநூறு ஏக்கர் பரப்பளவு பாலைவனம்போல் காணப்படுவது இன்றும் பலருக்கு நம்பமுடியாத ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வங்கக்கடல் சூழ்ந்திருந்த பகுதிதான் இப்போது சுண்ணாம்புக்கல் சுரங்கங்களாக உள்ளன.

இதற்கு தற்போது சிமென்ட் தயாரிக்கத் தேவையான சுண்ணாம்புக்கல் தோண்டும் பணிகளின்ேபாது  கிடைக்கும் கடல்வாழ் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஆதாரமாகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களை இணைக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல்வாழ் உயிரினங்களான நத்தைகள், கிளிஞ்சல்கள் போன்றவற்றின் படிமங்கள் வயல்களில் கண்டெடுப்பது வாடிக்கையாகி விட்டது.குறிப்பாக சாத்தனூர், மால்வாய், கொளக்காநத்தம், கொளத்தூர், கொட்டரை, கெருடமங்கலம் கிராமங்கள் சுண்ணாம்புப்படிவ பாறைகளாகவே இன்றும் காணப்படு கின்றன. இதில் கொளக்காநத்தம், ஊட்டத்தூர் பகுதிகளில் கல்புதை படிமங்கள் கண்ட றியப்பட்டுள்ளன. குன்னம், வரகூர் கிராமங்களில் கடல் நத்தைகளின் படிமங்கள் அதிகம் காணப்படுகின்றன.  

கடந்த 1982ம் ஆண்டில் கொட்டரை கிராமத்தில் அமோனைட் எனப்படும் மிகப்பெரிய கடல் நத்தை அரியலூர் வரலாற்றுத்துறை பேராசிரியர் தியாகராஜனால் கண்டறியப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொட்டரை, கூடலூர், கொளத்தூர் பகுதிகளில் செல்லும் ஆனைவாரி ஓடையில் கடல் கிளிஞ்சல்கள் பெருமளவு காணப்படுகிறது.10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஜுராசிக் சகாப்தத்தில் வாழ்ந்த முக்கிய உயிரினமான டைனோசர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிகம் வாழ்ந்துள்ளன. கடலைஒட்டிய சதுப்புநிலப் பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மிதவெப்ப சீதோஷ்ணம் நிலவும். அந்த காலகட்டத்தில்தான் இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்துள்ளன.

இதில் பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடிச் உண்ணும் மாமிச பட்சி ரக டைனோசர்கள் மற்றும் வெறும் தாவர இலைகளை மட்டுமே சாப்பிடும் சாதுவான சைவ சாரோபோட் ரக டைனோசர்கள் என இரண்டு ரகங்கள் உள்ளன. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இந்த இரண்டு ரகங்களின் முட்டைக ளும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் பெரிய டைனோசர் பட்டாளமே கூட்டமாக  வாழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கொளக்காநத்தம், மூங்கில்பாடி, கொளத்தூர், செந்துறை பகுதிகளில் உழும் வயல்களில் எல்லாம் டைனோசர் முட்டைகள் அதிகளவில் காணப்படுகிறது.

prescription coupon card prescription coupon viagra online coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்