SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை மிரட்டி நிர்வாணப்படம் பணம் பறித்த இன்ஜி. மாணவன் கைது

2015-09-13@ 03:23:41

ஐதராபாத்: பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி, பணக்கார மாணவிகளின் நிர்வாண படங்களை பெற்றதுடன், அவற்றை இணையதளத்தில்  வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஜினியரிங் மாணவனை போலீசார் கைது செய்தனர்.  இன்றைய இளைஞர்கள் தங்களது எண்ணங்களை  பகிர்ந்து கொள்ள இணைய தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் இ-மெயிலில் ஆரம்பித்து தற்போது பல்வேறு வகையான சமூக வலைதளங்கள்  உருவாகியுள்ளன. இவற்றில் பல்வேறு கருத்துக்கள் குறித்து அனல்பறக்கும் விவாதங்களும் நடைபெறுவது உண்டு. சாதாரண மனிதன் முதல்  அரசியல்வாதிகள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்  என பல்வேறு சமூக இணைய தளங்களுக்கு இளைய தலைமுறையிடையே பெருத்த வரவேற்பு உள்ளன. இதிலும்  பேஸ்புக்குக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.  இளைய தலைமுறையினர் பலர் சமூக வலைதளங்கள் மூலம் நல்லது  செய்துவருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த வகைகள், வழிதவறி தடுமாறும் சிறுவர், சிறுமியர்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு  தெரிவிப்பது என இதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்லும். ஆனாலும், இதிலும் சில ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அது குறித்த செய்திகளும்  அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. முக்கியமாக மாணவ, மாணவியர்கள் இணைய தளங்களை பயன்படுத்தும்போது பெற்றோருடன் கலந்தாலோசனை  செய்வது பயன்தரும்.

மாணவ, மாணவியர் பெற்றோருக்கு தெரியாமல் இணையதளங்களை பயன்படுத்தி வந்தால், அது ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதையே  கீழ்க்காணும் சம்பவம் விவரிக்கிறது.  ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத்(21). இன்ஜினியரிங் படித்து வருகிறான். இவரது அப்பா பீடா கடை  உரிமையாளர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் எனும் பகுதியில் வசித்து வருகின்றனர். இது பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் இடம். இப்பகுதி பள்ளி  மாணவிகளிடம் தொடர்பு ஏற்படுத்துவதற்காக அப்துல் மஜித், பெண்கள் பெயரில் 8 விதமான பேஸ்புக் கணக்குகளை தொடங்கி உள்ளான். இப்படி  தொடங்கிய பேஸ்புக் கணக்குகள் மூலம் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளிடம் நட்பு வட்டத்தை உருவாக்கி, சாட்டிங் செய்து வந்துள்ளான்.

முதலில் ஒழுங்காக பேசினாலும், பின்னர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளான். பெண் தானே என்று பேசியவர்களின் பேச்சுகளை அப்படியே பதிவு  செய்து கொண்டுள்ளான். பின்னர், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம், ‘‘உன்னுடைய ஆபாச பேச்சின் உரையாடலை பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன். அப்படி  அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால், உன்னுடைய நிர்வாண படத்தை எனக்கு அனுப்ப வேண்டும்’’ என்று மிரட்டியுள்ளான். அப்பாவி மாணவிகள்,  வலை விழுவது தெரியாமல் மீண்டும் பெண்தானே என்று நம்பி தங்களுக்கு நிர்வாணப் படத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதுபோன்று சுமார் 100  மாணவிகள், தங்களது நிர்வாண படத்தை இவனுக்கு அனுப்பியுனர்.

இதன்பின்னர்தான் இவனுடைய ஆட்டம் தொடங்குகிறது. சில தினங்கள் கழித்து, சம்பந்தப்பட்ட மாணவிகளை மீண்டும் தொடர்பு கொண்டு, மேலும் சில  படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளான். சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மறுப்பு தெரிவித்த மாணவிகளிடம், தான் போலீஸ் அதிகாரியின் மகள்  என்றும், புகைப்படங்களை அனுப்ப மறுத்தால் ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தை உங்கள் பெற்றோருக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதற்கு  பயந்து சிலர் மேலும் படத்தை அனுப்பியுள்ளனர்.

அனுப்ப மறுத்தவர்களிடம், உங்களது நிர்வாண புகைப்படத்தை இன்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று பயமுறுத்தியுள்ளான். இதனால் சில பெண்கள்  தங்களது புகைப்படத்தை அனுப்பினர். பின்னர் அதே புகைப்படங்களை முன்வைத்து பணம் கேட்டும் மிரட்ட ஆரம்பித்துள்ளான். இப்படி ஒரு பெண்ணிடம்  இருந்து ரூ.80,000 வரை வாங்கியுள்ளான்.  இப்படி தொடர்ந்து 18 மாதங்களாக பேஸ்புக் மூலம் பல பெண்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான்.

இதில் பாதிக்கபட்ட ஒரு மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது தாயார் விவரம் கேட்டார். அப்போது தான் அந்த மாணவி இந்த  விவரங்களை தெரிவித்தார். அதன்பின் அந்த தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்துல்  மஜீத்தை கைது செய்துள்ளனர். எனவே இளைய தலைமுறையினர் இனியாவது உஷாராக இருக்க வேண்டும்.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்