ரொனால்டோ அபார ஆட்டம் கால் இறுதியில் போர்ச்சுகல

Date: 2012-06-19@ 01:15:45

கார்கிவ் : யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் 2,1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய போர்ச்சுகல் அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இப்போட்டியில், நெதர்லாந்து அணியின் ரபேல் வாண்டெர் வார்ட் 11வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு 1,0 என முன்னிலை கொடுத்தார். இதையடுத்து தாக்குதலை தீவிரப்படுத்திய போர்ச்சுகல் வீரர்கள் நெதர்லாந்து கோல் பகுதியை முற்றுகையிட்டு கோல் அடிக்க முயற்சித்தனர்.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 28வது நிமிடத்தில் அபாரமாக பதில் கோல் அடித்து 1,1 என சமநிலை ஏற்படுத்தினார். இதையடுத்து, 2வது பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. ரொனால்டோ 74வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க போர்ச்சுகல் 2,1 என முன்னிலை பெற்றது. பரபரப்பான கடைசி நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ நழுவவிட்டார். அவர் அடித்த பந்து துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது.

இறுதியில் போர்ச்சுகல் அணி 2,1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 2,1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி விளையாடிய 3 லீக் ஆட்டத்திலும் வென்று 9 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்தது. போர்ச்சுகல் 6 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றது. இந்த பிரிவில் டென்மார்க் (3), நெதர்லாந்து (0) அணிகள் பரிதாபமாக வெளியேறின.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
plavix plavix 300 plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News