SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்கள் கைது: கல்லூரி வளாகத்தில் பதற்றம்

2015-08-19@ 10:54:55

புனே: புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் ) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்