SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் நலக்குறைவால் ஜனாதிபதி பிரணாப் மனைவி காலமானார் : மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

2015-08-19@ 00:23:48

புதுடெல்லி : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 74.சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 7ம் தேதி சுவ்ரா முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இதய நோயாளியான அவர் கடந்த 11 நாளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 10.51 மணிக்கு காலமானார். வங்கதேசத்தின் ஜெசோர் நகரில் 1940ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தவர் சுவ்ரா. அவருக்கு 10 வயது இருக்கும் போது, அவரது குடும்பத்தினர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு பள்ளி, கல்லூரிகளில் படித்த சுவ்ரா, தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் தீவிர ரசிகை. இதனால் ரவீந்திரநாத் பற்றி நாட்டிய நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி உள்ளார்.

பிரணாப்-சுவ்ரா திருமணம் கடந்த 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடந்தது. இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற 2 மகன்களும், ஷர்மிஸ்தா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் அபிஜித் காங்கிரஸ் எம்பியாக உள்ளார். சுவ்ராவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
rite aid load to card coupons centaurico.com rite aid store products
sinemet go sinemet
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்