SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1689 ஏக்கரில் பறவைகள் சரணாலயம

2012-06-14@ 01:02:20

சென்னை : பள்ளிக்கரணையில் சுமார் 1689.48 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நில வனப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு, அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில் இயற்கையாகவே சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை பாது காக்க வேண்டும் என்ற தமிழக அரசு கடந்த 2002 நவம்பர் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து அந்த பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 20 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 வழக்குகள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அதிலும் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நில வனப்பகுதி சுமார் 1580.8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு இந்த இடம் சொந்தமாக உள்ளது. அனைத்து துறைகளிடம் இருந்தும் நிலத்தை கையகப்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் ஒப்படைத்து, பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில வனப்பகுதியை பறவைகள் சரணாலயமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக 782.99 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மேம்படுத்த வனத்துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.அங்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 420.88 ஏக்கர் பரப்பளவு இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடமும் விரைவில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

வருவாய் துறையிடம் உள்ள 348.27 ஏக்கர் இடத்தையும், பள்ளிக்கரணை பகுதியில் நிதி நகரம் அமைக்க ஒதுக்கப்பட்ட 177.09 ஏக்கர் நிலத்தையும் பெற வனத்துறை முயற்சி செய்து வருகிறது. இப்படி அனைத்து இடமும் கிடைத்துவிட்டால், 1580.8 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நில வனப்பகுதியை மேம்படுத்தி மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக மாற்ற வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சி.வி.சங்கர் கூறியதாவது: பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் ஒருங்கிணைத்து பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருகிறார். சதுப்பு நில வனப்பகுதியை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ரூ.15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் சதுப்பு நில வனப்பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் சேராமல் தனி வழி அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அப்பகுதியை பாதுகாக்க தனி வனச்சரகர், 2 வனக்காவலர், 4 பாதுகாவலர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் பள்ளிக்கரணை பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு தடுக்கப்படுவதுடன் கழிவுகள், குப்பைகள் அங்கு கொட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், அந்த பகுதியை சுற்றியுள்ள நிறுவனங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் இருப்பர். இந்த சங்கத்தின் ஆலோசனையை பெற்று, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கரணை சதுப்பு நில வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. ஆனால் அந்த பறவைகள் தங்கி கூடு கட்டுவதற்கு அப்பகுதியில் மரங்களே இல்லாததால், மின்கம்பி அல்லது அருகே உள்ள இந்திய தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் கூடு கட்டும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு அப்பகுதி முழுவதும் மரக்கன்று நடும் பணி தொடங்கி உள்ளது.

இங்கு வரும் பறவைகளை பார்வையிட வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் பைனாகுலர் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சதுப்பு நில பகுதி முழுவதையும் வனத்துறை கைப்பற்றிய பிறகு, பள்ளிக்கரணை பகுதி பறவைகள் சரணாலயமாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பறவைகளை பார்வையிட வசதியாக உள்ளேயே நடைமேடை அமைக்கப்படும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். செயல் விளக்க கூடம் அமைக்கப்பட்டு, சதுப்பு நில பகுதி பற்றியும், பறவைகள் பற்றியும் சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சி.வி.சங்கர் கூறினார்.

சதுப்பு நில பகுதியால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணையை சுற்றி அமைந்துள்ள சதுப்பு நில பகுதி இயற்கை பாதுகாப்புக்கான ஒரு கேடயமாக விளங்குகிறது. இந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டி, குடியிருக்க முடியாது. சேறு, சகதியுடன் அப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு காணப்படும். தண்ணீரை நீண்ட நாட்கள் தேக்கி வைத்திருக்கும் சக்தி இயற்கையாகவே இப்பகுதியில் அமைந்துள்ளது.

இதன்மூலம் மழை காலங்களில் வெள்ள அபாயத்தை தடுக்க முடியும். பறவைகளுக்கு உணவு வழங்கும் இடமாக சதுப்பு நில பகுதி உள்ளதால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரை தேடி இப்பகுதிகளுக்கு வருவது வாடிக்கையான ஒன்று. சதுப்பு நில பகுதி மூலம் நிலத்தடி நீர் உயருவதுடன், தண்ணீரை நீண்டநாள் தேக்கி வைத்து, கழிவுகளை சுத்தப்படுத்தி, வடிகட்டி அப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவும் உதவி செய்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

121 பறவை வகைகள்
பள்ளிக்கரணையில் தற்போதுள்ள செடி, பூச்சி, மீன்கள், பறவைகள் விவரம் வருமாறு:

உயிரினங்கள்                     வகைகள்
செடி வகைகள்    14
வண்ணத்து பூச்சிகள்    7
நண்டு, இறால்    5
நத்தைகள்    9
மீன்கள்    46
தவளைகள்    10
ஆமை/நீர் பூச்சிகள்    21
உள், வெளிநாட்டு பறவை    121
பாலூட்டிகள்    10

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
sms spy app phone monitoring software spy apps free
prescription coupon card prescription coupon viagra online coupon
sinemet megaedd.com sinemet
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jatayu_bird11

    200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

  • othigai_111sunami

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

  • chennai_udall11

    உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

  • SnowfallnorthernIndia

    வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

  • goa_train_acc

    கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்