SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன

2012-06-10@ 00:48:30

சிங்கப்பூர்: ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்காக ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்‘ பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போனுடன் கமல் ஒப்பந்தம் செய்துள்ளார். சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இங்கு தமிழ், இந்தியில் கமல்ஹாசன் உருவாக்கியுள்ள ‘விஸ்வரூபம்‘ படத்தின் முன்னோட்டம் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. இதில் படத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பது பற்றி கமல்ஹாசன் அறிவித்தார். அப்போது ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்‘ தயாரிப்பாளர் பேரி ஆஸ்போனும் அவருடன் இருந்தார். இது பற்றி ஆஸ்போன் கூறியதாவது: விஸ்வரூபம் படத்தை எனக்கு கமல்ஹாசன் திரையிட்டு காண்பித்தார். அதில் அவருடைய உழைப்பு பிரமிக்க வைத்தது. இதையடுத்து இருவரும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசினோம். சினிமா, இலக்கியம், வரலாறு தொடர்பாக கமல் அறிந்து வைத்திருக்கிற விஷயங்கள் அவர் ஒரு என்சைக்ளோபீடியா என்பதை காட்டியது.

பின்னர் படம் பண்ணுவது பற்றி அவர் சொன்ன ஐடியாவை கேட்டதும் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை. சரி, சேர்ந்து படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இந்திய கலாசாரம் மற்றும் வரலாறை ஹாலிவுட் ஸ்டைலில் சொல்லும் படமாக அது இருக்கும். இந்திய கலைஞர்களுடன் பணியாற்ற முன்பு எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என்ன மாதிரியான கதையை எடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. இப்போது கமல்ஹாசன் சொன்ன கான்செப்ட் என்னை கவர்ந்ததால் அதை தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஆஸ்போன் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, ‘‘ஆஸ்போன் என் ஐடியாவை ஏற்றுக்கொண்டது எனக்கு கிடைத்த கவுரவம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதை இந்த மாதிரியான ஒரு நிகழ்வில் அறிவிப்பதுதான் சிறந்தது. இது எனது கேரியரில் முக்கியமான தருணம் என்பதால் இதை உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன். இந்த படத்தில் எனது ரோல், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் முடிவாகவில்லை’’ என்றார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
rite aid load to card coupons centaurico.com rite aid store products
prescription coupon card viagra online coupon viagra online coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்