SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த விமானி என் மகன் உயிருடன் திரும்புவான்: தாயார் உருக்கம்

2015-06-12@ 00:06:17

சென்னை: ரோந்து விமானத்தில் மாயமான விமானி சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. நேற்று 3வது  நாளாக தேடும்பணி தொடர்ந்தது. விமானி உயிருடன் திரும்பி வருவார் என விமானியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். இந்தியாவின் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி மும்பையில் கடந்த 2008ல் தாக்குதல் நடத்தினர். இந்த மோசமான தாக்குதலுக்கு பிறகு,  மீண்டும் அதுபோல ஒரு துக்க சம்பவம் நிகழக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் 6 மாதத்திற்கு ஒரு முறை ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில்  பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஒத்திகையின் ஒரு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செவ்வாய் காலையில் தொடங்கி 2 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி, கடந்த திங்கள் இரவு ஒத்திகை காரணமாக கடல் பகுதியை கண்காணிக்கும் பணியில் கடலோர காவல் படைக்கு சொந்தமான  “டார்னியர்” ரக குட்டி விமானம் ஈடுபடுத்தப்பட்டது. அந்த விமானத்தில் விமானிகள் வித்யாசாகர், எம்.கே.சோனி, துணை கமாண்டர் சுபாஷ் சுரேஷ்  ஆகியோர் பயணித்தனர். சென்னையில் இருந்து திங்கள் இரவு 7 மணி அளவில் புறப்பட்ட இந்த விமானம் இரவு 10.30 மணி அளவில் ரோந்து  பணிகளை முடித்து விட்டு திட்டப்படி தலைமையகத்துக்கு திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால், நாகைக்கும் கடலூருக்கும் இடையில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென மாயமானது. கடைசியாக திருச்சி ரேடாரில்  விமானத்தில் சிக்னல் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தமிழகம் மட்டும்  அல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்கள், அதிநவீன படகுகள்  ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. தேடுதல் வேட்டை நேற்று 3வது நாளாக நீடித்தது. இதுதவிர தமிழகம் முழுவதும் 13 கடலோர  மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டன. மீனவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நல்லாறு அருகே மாயமான  விமானம் கடலில் விழுந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றும் கிடைத்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் அப்பகுதியில்  முகாமிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். 10 ரோந்து கப்பல்கள், 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் குட்டி விமானத்தை தேடிக்  கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது புதுவை, கடலூர் பகுதிகளை சுற்றி தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால்,  மாயமான விமானத்தையும், அதில், பயணம் செய்த வீரர்களையும் இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், மாயமான விமானத்தை  கண்டு பிடிக்க இஸ்ரோவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செயற்கைகோள் உதவியுடன் மாயமான விமானத்தை கண்டு பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 நீர் மூழ்கி கப்பல்  உள்பட 15 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளன. 96 மணி நேரத்திற்கும் அதிகமாக தேடுதல் பணி நீடித்துள்ளது.இதனால், மாயமான  விமானத்தில் இருந்த 3 பேரின் பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர். சென்னை விமானி: விமானத்தில் பயணம் செய்த 3 பேரின் பெயர் விபரங்கள்  மட்டுமே வெளியாகி இருந்தது. அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடமாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.  இதையடுத்து மாயமான விமானிகளில் ஒருவர் சுபாஷ் என்றும் அவர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசித்து வரும் சுபாசின் தந்தை பெயர் சுரேஷ். இவர் சென்னை துறைமுகத்தில் தொழில் நுட்ப பணியாளராக  உள்ளார். சுபாசின் மனைவி தீபலட்சுமி (29). இந்த தம்பதியருக்கு நிசாந்த் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுபாஷ் பிடெக் படித்து விட்டு  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் பைலட் பயிற்சியை முடித்தார். கடந்த 2008ம் ஆண்டு கடலோர காவல்படையில் பணியில் சேர்ந்தார்.  தனது பணியை கொச்சியில் தொடங்கினார். கடந்த டிசம்பர் மாதம்தான் சென்னைக்கு மாறுதலாகி வந்தார். கடந்த 8ம் தேதி காலை பணிக்கு சென்ற  சுபாஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சுபாசின் தாய் பத்மா கண்ணீர் மல்க கூறுகையில், “கடந்த 8ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வருவதாக போன் செய்த சுபாஷ் இரவு  11 மணிவரை வீட்டுக்கு வராததால் நாங்கள் போன் செய்தோம். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணி  அளவில் எங்கள் வீட்டிற்கு 2 விமானிகள் வந்து சுபாஷ் சென்ற விமானம் மாயமாகி விட்டது. தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல்  தெரிவித்தனர். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். நாட்டு பணியில் ஈடுபட்டிருந்த அவனுக்கு ஒன்றும் ஆகாது. நிச்சயமாக திரும்பி  வருவான். மீண்டும் பணி செய்வான். அவனை மீட்பதில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவனுக்காக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்  ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறோம் என்று என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பாரா மோட்டார்: சென்னை ஏரோஸ்போட்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர் மணிகண்ணன் கூறுகையில், அவசர  காலக்கட்டத்தில் கடலோர காவல்படைக்கும், போலீசாருக்கும் கடல் பகுதியில் தேடுதல் பணிக்கு உதவியாக ‘பாரா மோட்டார்’ இருக்கிறது. இது குறைந்தது 3 அடி உயரத்தில் கூட பறக்க கூடியதாகும்.  குறைந்த பட்சம் 30 கி.மீ வேகத்தில் இருந்து அதிகபட்சமாக 100 கி.மீ. வேகம் வரையில்  செல்லக்கூடியதாகும். இதை ஒரு விமானி மட்டும் இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது‘‘ என்றார்.

நிலம், நீர், ஆகாயம் மார்க்கமாக தேடுதல்

கடலில் மூழ்கிய விமானத்தில் இருந்து  வரும் சிக்னல்களை சேகரித்து அதன்மூலம் விமானத்தை கண்டறிவதற்காக அத்துறையில்  நிபுணரான  கோவையை சேர்ந்த சிபிதரன் கடலூர் வந்தார். அவர் கடலில்  விழுந்த விமானத்தின் சிக்னல்களை கண்டறியும் சோனார் கருவியுடன் கடலூர்   மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் படகில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இவர் கடலுக்குள் மின்காந்த அலைகளை (சிக்னல்) அனுப்பி அதனை  ஆய்வு செய்து விமான  பாகங்கள் ஏதாவது கடலுக்குள் விழுந்துள்ளதா என கண்டறிந்து வருகிறார்.

தமிழக கடலோர காவல்படை ஏடிஜிபி சைேலந்திரபாபு,  எஸ்பி மனோகரன், கடலூர் எஸ்பி ராதிகா மற்றும் அதிகாரிகள் கடலில்  விசைப்படகில்  சென்று தேடுதல் பணியை விரைவு படுத்தி வருகின்றனர். இந்திய கப்பல்படை, கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்களும்  தேடுதல்  பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்து  அதிநவீன நீர்மூழ்கி கப்பலும் கடலூர் நோக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்நிலையங்களில் டார்னியர் விமானங்கள் பாகங்கள் அல்லது ஏதாவது பொருட்கள் கீழே விழுந்து  கிடந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என தண்டோரா போட்டு  அறிவிக்கும்படி கடலூர் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

drug coupon card prostudiousa.com drug discount coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்