Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மீன்வளத் துறையில் மின்னும் வாய்ப்புகள்...



பிளஸ் 2 படித்து விட்டு அடுத்து புதுமையான படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு மீன் வளத் துறையில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீன்வளத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பும் படிக்கலாம், அதிலேயே பொறியியல் படிப்பும் படிக்கலாம். மீன்வளத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு ஆராய்ச்சிப் படிப்புகளையும் தொடர முடியும்.சென்னை பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வள பட்டப்படிப்பான பி.எப்.எஸ்.ஐ. படிப்பில் சேரலாம். இதே கல்லூரியில் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இந்தப் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மீன்வளத் துறையில் படிப்பவர்கள் மீன்வளத் துறையின் பல்வேறு பணிகளில் சேர வாய்ப்புள்ளது. மீன்வள ஆய்வாளர், மற்றும் மீன்வளம் சார்ந்த துறைகளிலும் பணி வாய்ப்புகள் காத்திருக்கிறது. நாகபட்டினத்தில் செயல்படும் மீன்வளக் கல்லூரியிலும் இளங்கலை மீன்வளப் படிப்பு உள்ளது.

மீன் வளத்துறையில் பட்டப்படிப்பை முடிப்பவர்கள் மீன் மற்றும் இறால் பண்ணை நிர்வகித்தல், மீன் வளம் சார்ந்த சுய ெதாழில்களில் இறங்கவும் முடியும். சென்னை பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் படிப்பவர்கள் பழவேற்காடு ஏரியில் நன்னீர் உவர்நீர் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும். மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து ெகாள்ளலாம். முதுநிலை மீன்வளப் படிப்பான எம்.எப்.எஸ்.சியும் உள்ளது.நாகபட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கலையில் மீன்வளம் சார்ந்த பொறியியல் படிப்பு, இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நாகபட்டினம் மீன்வளக்் கல்லூரியில் 20 இடங்களுடன் பொறியியல் கல்வி துவக்கப்பட்டுள்ளது. இதற்கும் www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மீன்வளத் துறையில் மின்னக் காத்திருக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

rite aid load to card coupons centaurico.com rite aid store products

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News

செய்திகள்

Advertisement
Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement
Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

31

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
விவாதங்கள்
வருமானம்
முன்னேற்றம்
சுறுசுறுப்பு
விமர்சனம்
வெற்றி
உதவி
அனுபவம்
திட்டம்
நினைவுகள்
குழப்பம்
சந்தேகம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran