வெளிநாட்டு மொழியை கற்றும் சம்பாதிக்கலாம்

Date: 2015-05-31@ 00:11:29

நம் நாட்டிலிருந்து ஆண்டுதோறும், வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு தடையாக இருப்பது மொழி. தற்போது பல கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்கின்றன. அவற்றில் பல தரப்பு மாணவர்களாலும் கற்கப்படும் மொழி ஸ்பானிஷ். இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், சர்டிபிகேட் படிப்புகள் என பல கல்வி நிறுவனங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. ஜெர்மன், ஜப்பானிஸ் மற்றும் ரஷ்ய மொழிகளை காட்டிலும் இந்த மொழி பிரபலமானது.

 இத்துறையில் படிப்பை முடித்தவர்கள் அரசு தூதரகத்தில் பணியில் அமரும் வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டுமின்றி சுற்றுலாத்துறை, கால்சென்டர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளில் வேலைவாய்ப்பை பெறலாம். இதனை இந்தியாவில் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள்: டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி. ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி. இ.எப்.எல். பல்கலைக்கழகம், ஐதராபாத். புனே பல்கலைக்கழகம், புனே. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி. மும்பை பல்கலைக்கழகம், மும்பை. கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா.

amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

Like Us on Facebook Dinkaran Daily News