SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் மியன்மாரின் ரோஹிங்கியா மக்கள்

2015-05-27@ 16:40:31

மியான்மர்: புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான  ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர். இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர்  நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.அங்கு பிரதான மூன்று வகையாக‌ முஸ்லிம்கள்  இருக்கின்றார்கள் .01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் ) 02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில்  1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சியமைப்புக்கு மாறியபோது மீண்டும் மியான்மரில் இனக்கலவரங்கள் தொடங்கின. அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள். 280 பேருக்குமேல் கொல்லப்பட்ட வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40.000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இன்வாத பெளத்த பிக்குகள் தலைமையில்  இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது .

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் புளி மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருபவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர். பின்னர் மலேசியாவும் இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடதக்கது  ரோங்கியா முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து சர்வதேச அளவில் கடும் கண்டன குரல் எழும்பி வருகின்றன‌.

venlafaxine forum click venlafaxine 150
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்