SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிங்டோனில் அம்பேத்கர் பாட்டு: தலித் இளைஞர் கொலையில் 4 பேர் சிக்கினர்

2015-05-24@ 03:12:50

மும்பை: டாக்டர் அம்பேத்கர் பாட்டு ஒன்றை மொபைல் போனில் ரிங்டோனாக வைத்த குற்றத்துக்காக தலித் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி  படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் பெயர் சகார் ஷெஜ்வல் (21). நர்சிங் மாணவரான சகார், கடந்த மே 16ம் தேதி  திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஷிர்டிக்கு வந்திருந்தார். பிற்பகல் 2 மணியளவில்  அங்குள்ள பீர் கடை ஒன்றில் தனது உறவினர்கள் இருவருடன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவருடைய செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.  தலித்துக்களுக்கு அம்பேத்கர் செய்த சேவைகளை பாராட்டும் வகையில் அந்த செல்போன் ரிங்டோன் அமைந்திருந்தது.

அப்போது பக்கத்தில் இருந்த 8 இளைஞர்கள் இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்தனர். அதை சுவிட்ச் ஆப் செய்யும்படி கூறினர். இதைத் தொடர்ந்து  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பீர் பாட்டில் ஒன்றினால் சகார் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த இளைஞர்கள் சகாரின் முகத்தில்  சரமாரியாக குத்தினர். பிறகு அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை கல்லால்  அடித்து கொலை செய்ததுடன் மோட்டார் சைக்கிளை பல முறை உடலில் ஏற்றி சிதைத்துள்ளனர்.

அதற்கான காயங்கள் உடலில் காணப்பட்டது. அன்றைய தினம் மாலையில் காட்டுப்பகுதி அருகே உள்ள ஷிங்க்வே கிராமத்தின் அருகே சகாரின் உடல்  கண்டெடுக்கப்பட்டது. சகாரை தாக்கிய 8 பேரும் உயர் சாதியை சேர்ந்த மராத்தா வகுப்பினர் என போலீசார் தெரிவித்தனர். சகாரின் மொபைல் போன்  என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் பீர் பாரில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நடந்த சம்பவம் பதிவாகி இருப்பதாக போலீசார்  தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷிர்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொலையாளிகளில் 4 பேர் பிடிபட்டுள்ளதாக ஷிர்டி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருவர் கோவாவில் பிடிபட்டனர். ஒருவர்  புனேயிலும் மற்றொருவர் ஷிர்டி நகரிலும் பிடிபட்டனர். மேலும் நான்கு பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு  பேர், விஷால் கொதே, ரூபேஷ் வடேகர், எஸ்.வடேகர் மற்றும் சுனில் ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
walgreens promo read free pharmacy discount cards
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy
prescription coupon card prescription coupon viagra online coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்