SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி ! 4360 பேருக்கு வாய்ப்பு

2015-05-04@ 15:39:57

பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியான பள்ளியிறுதி வகுப்பு, இடைநிலைக் கல்வி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப் பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

18 வயதுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள், விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியின வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட உயர்கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

பத்தாம் வகுப்பு பாடத் திட்டத்திலிருந்து அறிவியலில் 120 கொள்குறி (சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்) வகை வினாக்களும் 30 பொது அறிவு கொள்குறி வகை வினாக்களும் கேட்கப்படும்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.100, சேவைக் கட்டணம் ரூ. 50 குறிப்பிட்ட சேவை மையங்களில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள்:

மே 6ம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31ம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

sms spy app click spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
drug coupon card prescription coupons drug discount coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்